உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய சிறுநீர்! எந்த நிறத்தில் இருக்க வேண்டும் தெரியுமா ?

சிறுநீரின் நிறம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை குறிக்கிறது. சிறுநீர் நிறமற்றதாக இருப்பது அவசியம். 2-3 நாட்களில் சிறுநீரின் நிறம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்றால் மருத்துவரை அணுகவும்.
image

சிறுநீரை தண்ணீர் போல நிறமற்ற திரவம் என குறிப்பிடலாம். எனினும் தண்ணீரில் நீல நிறம் அடக்கம் உள்ளது. சிறுநீரின் நிறம் சில சமயங்களில் மஞ்சள் நிறத்திற்கு மாறக்கூடும். இதற்கு உடலில் நீரேற்ற அளவு மற்றும் சாப்பிடும் உணவின் நிறம் மற்றும் உட்கொள்ளும் மருந்துகள் கூட காரணமாக இருக்கலாம். சிறுநீரின் நிறம் மாறும் போது உடல்நலனில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. சிறுநீரின் நிறத்தைக் யூரோக்குரோம் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். உடலுக்கு தேவையான நீர் அருந்தும் போது சிறுநீரின் நிறமற்றதாக இருக்கும். உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் சிறுநீர் பொன் நிறம் அல்லது வெளிர் பழுப்பு நிறத்திற்கு மாறும்.

urine color chart

சிறுநீரின் நிறமும் அர்த்தமும்

நிறமற்ற சிறுநீர்
போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்தால் சிறுநீர் நிறமற்றதாக வெளியேறும்.

வெளிர் நிறம்
போதுமான அளவு தண்ணீர் குடிக்க தவறினால் சிறுநீர் வெளிர் நிறத்தில் வெளியேறும்.

அடர் மஞ்சள்
தேவையான அளவை விட கம்மியாக குடித்தால் அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் தெரியும்.

ஆரஞ்சு
தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் மருந்து மாத்திரை உட்கொண்டால் சிறுநீர் ஆரஞ்சு நிறத்தில் வெளியேறும்.

பழுப்பு
போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் பழுப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறும். கல்லீரல் பிரச்னைகளும் இதில் அடங்கும்.

கருப்பு
கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக செயல் இழப்பு ஆகியற்றை கருப்பு நிற சிறுநீர் குறிக்கிறது.

சிவப்பு
சிறுநீருடன் இரத்தம் கலந்து வெளியேறும் போது சிவப்பு நிறத்தில் இருக்கலாம் அல்லது பீட்ரூட் சாப்பிட்டதன் காரணமாகும்.

பச்சை
நிறமி சேர்க்கப்பட்ட உணவு சிறுநீரை பச்சையாக மாற்றும். சிறுநீரக தொற்றையும் இது உறுதி செய்கிறது.

மருத்துவரை எப்போது அணுக வேண்டும் ?

  • சிறுநீரக தொற்று பாதிப்பு அல்லது சிறுநீரகத்தில் கல் இருந்தால் சிறுநீரில் இரத்தம் கலந்து வரும். சிறுநீரகத்தில் அதிக வலி ஏற்படும். தொடர்ந்து இரத்தம் வெளியேறினால் புற்றுநோய் போன்ற பாதிப்பாக கூட இருக்க வாய்ப்புள்ளது.
  • ஆரஞ்சு நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என அர்த்தம். இந்த பிரச்னையின் போது கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
  • தந்தை, தந்தையின் தந்தை ஆகியோருக்கு கிட்னி தொடர்பான பிரச்னை, கிட்னியில் பாதிப்பு இருந்தால் உங்களுக்கும் அதே பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
  • நீண்ட தூரம் ஓட்டப்பயிற்சி செய்யும் நபர்களுக்கும் இரத்தம் கலந்து சிறுநீர் வெளியேறும்.
  • சிறுநீரகம் ஒட்டுமொத்தமாக செயலிழந்து விட்டால் சிறுநீரின் நிறம் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும்.
  • குறைந்தளவு சிறுநீர் வெளியேற்றம், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை, சிறுநீரில் இரத்தம், சிறுநீர் நுரை போல் தெரிவது சிறுநீரக பாதிப்புகளின் அறிகுறிகளாகும்.
  • இது அனைவருக்குமே பொதுவான பிரச்னை என்றாலும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் சிறுநீரின் நிறம் இயல்பு நிலைக்கு வர வேண்டும் இல்லையெனில் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP