Side Effects of Bed Tea : காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பவரா நீங்கள்? இன்றே விட்டுவிடுங்கள், இல்லையெனில் இந்த பிரச்சனை வரும்.

பல் துலக்காமல் டீ குடிக்கும் பழக்கம் உங்களுக்கும் உள்ளதா? ஆம் எனில், இந்த பழக்கத்தை இன்றே விட்டு விடுங்கள், இல்லையேல் பல நோய்கள் உங்களுக்கு வரலாம்.

bed tea seide effects tamil
bed tea seide effects tamil

பல் துலக்காமல் டீ குடிக்கும் பழக்கம் உங்களுக்கும் உள்ளதா? ஆம் எனில், இந்த பழக்கத்தை இன்றே விட்டு விடுங்கள், இல்லையேல் பல நோய்கள் உங்களுக்கு வரலாம்.காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பதால் உண்டாகும் பக்க விளைவுகள்: காலையில் எழுந்தவுடனே ஒரு கப் டீ குடித்தால் தான், அந்த நாளே பலருக்கும் தொடங்கும். டீயின் வாசனை மற்றும் சுவை இரண்டும் நிவாரணம் தருகிறது. சிலர் ரெப்ஃப்ரெஷ் ஆன பிறகு டீ குடிப்பார்கள்.

சிலர் படுக்கையிலேயே டீ குடிக்கும் பழக்கத்தை வைத்திருக்கின்றனர். அதாவது காலையில் கண்களைத் திறந்தவுடன் பல் துலக்காமல் டீ குடிக்கும் பழக்கம் உங்களுக்கும் இருந்தால் கவனமாக இருங்கள். ஏனெனில் இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். உணவியல் நிபுணர் பிரியங்கா ஜெய்ஸ்வால் கூறுகையில், டீ குடித்தவுடன் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம், ஆனால் அதுவே பல நோய்களை உண்டாக்கும். காலையில் எழுந்தவுடனேயே டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி நிபுணர்கள் கூறுவதை கேட்போம்.

டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கும்?

காலையில் எழுந்த உடனேயே டீ குடிப்பதால், அது உங்கள் பசியை அழிக்கும் அல்லது மிகக் குறைந்த பசியை ஏற்படுத்தும், இதன் காரணமாக நீங்கள் காலை உணவைத் தவிர்ப்பீர்கள். இது போன்ற சூழலில், உங்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம், இது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.காலையில் எழுந்ததும், பல் துலக்காமல் டீ குடிப்பது உங்கள் பற்களுக்கு நிறைய சேதத்தை ஏற்படுத்தும் 8 மணி நேரம் தூங்கி எழும், நம் வாயில் பல வகையான பாக்டீரியாக்கள் இருக்கும். இதனால் வாயில் அமில அளவு அதிகரித்து, உங்கள் ஈறுகளையும் பற்களையும் சேதப்படுத்தத் தொடங்கும்.

tea

பற் குழிகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும், பல் எனமல் சேதமடையலாம். பற்கள் மஞ்சள் நிறமாகவும் மாறலாம்.இதனால் அசிடிட்டி மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் வயிற்றில் அமிலத்தின் அளவு அதிகரித்து, செரிமான ஜூஸ் அளவை சீர்குலைக்கும். இது அஜீரணம், வீக்கம், மலச்சிக்கல், வாயு, கனத்த வயிறு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். சில சமயங்களில் வயிற்றுப்புண்ணையும் உண்டாக்கும்.

வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் நம் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். டீயின் தன்மை டையூரிடிக் ஆகும், இது உடலில் இருந்து தண்ணீரை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது. அதேசமயம் நாம் 8 மணி நேரம் தூங்கும்போது, தண்ணீர் கூட குடிப்பதில்லை. இதன் காரணமாக ஏற்கனவே தண்ணீர் சத்து குறைவாக நம் உடலில் இருக்கும். இப்படிப்பட்ட நிலையில், காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைவதோடு, நீர்ச்சத்து பற்றாக்குறையால் தலைசுற்றல், வாந்தி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

வெறும் வயிற்றில் டீ குடிப்பது வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கிறது. இது அமில மற்றும் காரப் பொருட்களை ஒன்றாகக் கலந்து வளர்சிதை மாற்றத்தின் செயல்பாட்டை தடுக்கிறது. இது வயிற்றுப் பிடிப்பு மற்றும் தலைச்சுற்றலை ஏற்படுத்தும். பல் துலக்காமல் டீ குடிப்பதால், வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள் செல்கின்றன, இதன் காரணமாக உடலில் நச்சுத்தன்மையின் அளவு அதிகரிக்கிறது.

டீ குடிக்க சரியான நேரம் எது?

நிபுணர்களின் கூற்றுப்படி, டீ குடிப்பதற்கான சிறந்த நேரம் காலை உணவுக்குப் பிறகு அல்லது காலை உணவுடன் டீ குடிப்பதாகும். நீங்கள் மாலையில் ஸ்நாக்ஸ் உடன் சேர்த்து டீ குடிக்கலாம், ஆனால் வெறும் வயிற்றில் டீ குடித்து அந்த நாளைத் தொடங்க வேண்டாம். காலையில் முதலில் குறைந்தது 2 கிளாஸ் தண்ணீர் குடித்தால் நல்லது. கூடுதல் நன்மைகளைப் பெற, காலையில் வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை, சீரக தண்ணீர், கிரீன் டீ ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP