சிறிய அளவுகளில் இருக்கும் எள் விதைகளில், அளவில்லாத ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் எள்ளிலிருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெய் பெண்களுக்கு அதிக நன்மைகளை தருகிறது. நல்லெண்ணெயில் வைட்டமின் E, B காம்ப்ளக்ஸ், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் யாவும் எலும்புகளை வலுப்படுத்தவும், முடியை பராமரிக்கவும், மன அழுத்தத்தை போக்கவும் உதவுகின்றன.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நல்லெண்ணெய் வயதான தோற்றம், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளின் விளைவுகளிலிருந்து உடலை பாதுகாக்கின்றன. இத்தகைய நற்பண்புகள் நிறைந்த நல்லெண்ணெய் பெண்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஆயுர்வேத மருத்துவரான அப்ரா முல்தானி அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: 15 நாட்களில் 3 கிலோ எடையை குறைக்க, நிபுணரின் அட்டகாசமான குறிப்புகள்!
நல்லெண்ணெயில் உள்ள உணவு புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் எலும்புகளுக்கு வலிமையை தருகின்றன. மேலும் நல்லெண்ணெயை கொண்டு குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும் உதவுகிறது.
நல்லெண்ணெயில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் தசைகளை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றன.
நல்லெண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது. சருமத்திற்கு நல்லெண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெறுவதுடன், சருமத்தின் ஈரப்பதத்தையும் தக்க வைத்துக் கொள்ளலாம். இதில் உள்ள வைட்டமின் B மற்றும் E சரும பொலிவை பராமரிக்க உதவுகின்றன.
நல்லெண்ணெய் பற்களுக்கும் அதிக நன்மைகளை தரும். காலையிலும் இரவு வேளையிலும் பல் துலக்கிய பிறகு எள்ளை மென்று சாப்பிடுவது பற்களை வலுப்படுத்துவதுடன், கால்சியம் சத்துக்களையும் வழங்குகிறது. வாய் புண்களிலிருந்து நிவாரணம் பெற நல்லெண்ணெயுடன் சிறிதளவு கல் உப்பை கலந்து புண்களின் மீது தடவலாம்.
குதிகால் வெடிப்பு நீங்க நல்லெண்ணெயை சூடாக்கி அதில் கல் உப்பு மற்றும் வேக்ஸ் கலந்து வெடிப்புகளின் மீது தடவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் குதிகால் வெடிப்புகளை விரைவில் சரி செய்யலாம்.
மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்க உதவும் சில தனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் எள்ளில் காணப்படுகின்றன. மன அழுத்தத்தில் இருந்து விடுபட நல்லெண்ணெயை கொண்டு மசாஜ் செய்யலாம்.
நல்லெண்ணெய் முடியை உள்ளிருந்து வலுப்படுத்துகிறது. நல்லெண்ணெயை லேசாக சூடாக்கி, அதனைக் கொண்டு தலைக்கு மெதுவாக மசாஜ் செய்யலாம். இவ்வாறு மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் முடியின் வளர்ச்சியையும் தூண்டுகிறது. முடி உதிர்வை தடுக்க நல்லெண்ணெய் மசாஜ் பயன் தரும்.
நல்லெண்ணெயில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் மற்றும் சத்துக்கள் உடலுக்கு பல அற்புத நன்மைகளை தருகின்றன. இதில் உள்ள சில பண்புகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கின்றன. சர்க்கரை நோய் முதல் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வரை பலருக்கும் நல்லெண்ணெய் பயன் தரும். இதை சமையலுக்கு பயன்படுத்தலாம் அல்லது வாய் வழியாக எடுத்துக் கொள்ளலாம். இது வெளிப்புறமாக மசாஜ் செய்வதற்கும் ஏற்றது. இத்தகைய நற்பண்புகள் நிறைந்த நல்லெண்ணெயை நீங்களும் பயன்படுத்தி ஆரோக்கியத்தை காத்திடுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: 30 வயதிலும் கருத்தரிக்காலம், PCOS உள்ள பெண்களுக்கான ஸ்பெஷல் டிப்ஸ்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com