herzindagi
weight loss quickly expert tips

Lose 3 Kgs in 15 Days : 15 நாட்களில் 3 கிலோ எடையை குறைக்க, நிபுணரின் அட்டகாசமான குறிப்புகள்!

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் உங்களுடைய உணவு மற்றும் வாழ்க்கை முறையில் கவனம் செலுத்துங்கள். இதனுடன் நிபுணர் பரிந்துரை செய்யும் இந்த எளிய குறிப்புகளையும் பின்பற்றுங்கள்…
Editorial
Updated:- 2023-09-27, 19:20 IST

உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டும் என்று ஒரு சிலர் தவறான வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். எடையை குறைக்க வேண்டும் என்று நீண்ட நேரத்திற்கு பசியுடன் இருப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே எடையை குறைப்பதில் அவசரம் வேண்டாம். எடையை வேகமாக குறைப்பதற்கு பதிலாக சரியான முறையில் குறைப்பதற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நாம் எடுத்துக்கொள்ளும் உணவு உடல் எடையை பாதிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இதனுடன் உணவு எடுத்துக்கொள்ளும் நேரம், உணவுக்கு இடையிலான இடைவெளி போன்ற பல விஷயங்களும் உடல் எடையை தீர்மானிக்கின்றனர். இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள குறிப்புகளை சரியாகப் பின்பற்றினால், 15 நாட்களில் 2-3 கிலோ வரை எடையை எளிதில் குறைக்கலாம். இதற்கான குறிப்புகளை ஊட்டச்சத்து நிபுணரான சிம்ரன் கவுர் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உடலின் அனைத்து உறுப்புகளையும் பலப்படுத்தும் முந்திரி பழம் பற்றி தெரியுமா!

உடல் எடையை குறைக்க எளிய குறிப்புகள்

quick weight loss

உங்களுடைய உணவில் புரதத்தையும் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்ளவும்

உடல் எடையை குறைக்க உணவில் சரியான அளவு புரதத்தை சேர்க்க வேண்டும். கொழுப்புகளை போல புரதச்சத்துக்கள் உடலில் சேமிக்கப்படுவதில்லை. இது போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது நீண்ட நேரத்திற்கு பசி உணர்வு ஏற்படாமல் இருக்கும். மேலும் இது போன்ற புரதம் நிறைந்த உணவுகளை எடை இழப்புக்கான ரகசியமாக உணவியல் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். பருப்பு வகைகள், முட்டை, பீன்ஸ், உலர் பழங்கள், பயறு வகைகள் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை உங்கள் தினசரி உணவு முறையில் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் உங்களுடைய தினசரி உணவில் கார்போஹைட்ரேட்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களுடைய சமச்சீரான உணவு முறையில் புரதம் நிறைந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

எடை இழப்புக்கு உதவும் இன்ஃப்யூஸ்ட் தண்ணீர் 

உடல் எடையைக் குறைக்க இன்ஃப்யூஸ்ட் தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு வெள்ளரிக்காய் சியா விதைகள், புதினா, இஞ்சி போன்ற ஆரோக்கியமான சில பொருட்களை தண்ணீருடன் சேர்த்து குடிக்கலாம். இந்த நீர் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதோடு மட்டுமின்றி உடல் எடையையும் குறைக்க உதவுகிறது. மேலும் இது போன்ற தண்ணீரை குடிக்கும் பொழுது செரிமான செயல்முறையும் சீராக நடைபெறும்.

weight loss diet and fitness

குடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும் 

உடல் எடையை குறைக்க உடல் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. குடல் ஆரோக்கியம் சரியாக இருந்தால் மட்டுமே செரிமானம் சீராக நடைபெறும். குடல் ஆரோக்கியம் சீராக இல்லாவிட்டால் உடல் எடையை குறைப்பது கடினமாக மாறலாம். இதை தடுக்க ஆப்பிள், இஞ்சி, கிரீன் டீ, பாதாம், தயிர் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதுபோன்ற உணவுகளில் காணப்படும் ஆரோக்கியமான நல்ல பாக்டீரியாக்கள் குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. உடல் ஆரோக்கியம் சீராக, வயிறு சுத்தமானால் உடல் எடை குறைப்பதும் சுலபமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் 2 வேப்பிலையை மென்று சாப்பிட்டால் போதும், வாழ்நாள் முழுக்க ஆரோக்கியமாக வாழலாம்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com