செம்பருத்தி செடியின் இலை மற்றும் பூக்களில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதிலும் அதனுடைய பெரிய வண்ணமயமான பூக்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால் இது ஒரு அழகான அலங்கார பூ மட்டுமல்ல, இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அந்தோசயினின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற அத்தியாவசிய சேர்மங்களும் உள்ளன.
செம்பருத்திப் பூக்கள் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை உடையதாக இருக்கும். இது குளிர்ச்சி தன்மை உடையது. செம்பருத்தி செடிகளில் பல வகை உண்டு, இவை மூலிகை மருந்துகளாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
செம்பருத்திப் பூக்களில் பித்தத்தை குறைக்கும் பண்புகளும், இரத்த கசிவு எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இவை பின்வரும் பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்
இவை இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதற்கு பயனுள்ளதாக இருக்கும். இது இரத்த சோகை, மூலம், தூக்கமின்மை, சிறுநீர் பாதை தொற்று(UTI) மற்றும் இரத்தப்போக்கு பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. இவை உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதோடு மட்டுமின்றி சருமம் மற்றும் முடி சார்ந்த பிரச்சனைகளையும் நீக்குகின்றன.
ஆனால் செம்பருத்தி பூக்களை சரியான முறையில் பயன்படுத்து எப்படி? இதற்கான விடையை ஆயுர்வேத நிபுணர் டாக்டர் தீக்ஷா பவ்சர் அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம். இந்த தகவல்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உடலில் பித்தம் அதிகம் இருப்பவர்கள் மற்றும் இரவில் அதிக நேரம் கண்விழித்து வேலை பார்ப்பவர்களுக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். இதனால் முடி உதிர்வும் ஏற்படலாம். இந்நிலையில் உடல் சூடு மற்றும் பித்தத்தை சீராக்க செம்பருத்தி டீ யை குடிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க தண்ணீர் போதுமா?
சர்க்கரை நோய், நரைமுடி, முடி உதிர்தல், கொலஸ்ட்ரால், மாதவிடாய் வலி, அசிடிட்டி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதர பித்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு செம்பருத்தி டீ பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற பிரச்சனைகளுக்கு செம்பருத்தியை டீ வடிவில் எடுத்துக் கொள்வதே சிறந்தது.
இந்த பதிவும் உதவலாம்: உங்களை உள்ளிருந்து அழகாக்கும் உணவுகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com