வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாக; மாத்திரை மருந்து இல்லாத பாட்டி வைத்தியம் இதோ

வெள்ளைப்படுதல் தெளிவான நீர்மமாகவும், துர்நாற்றமின்றி இருந்தால், அது ஒரு ஆரோக்கியமான உடல் நிலையைக் குறிக்கும். ஆனால், அது கெட்டியாகவோ அல்லது மஞ்சள் நிறத்திலோ, கடுமையான துர்நாற்றத்துடன் இருந்தால், அது அந்தரங்க பகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
image

பெண்கள் வெளிப்படையாகப் பேச முடியாமல் தவிக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் வெள்ளைப்படுதல். சில பெண்களுக்கு இந்த வெள்ளைப்போக்கு உடை நனையும் அளவுக்கு அதிகமாக இருக்கும். இதனுடன் சேர்ந்து அந்தரங்க பகுதியில் அரிப்பு மற்றும் துர்நாற்றமும் ஏற்படும். இதை மருத்துவ மொழியில் "லுகோரியா" என்று அழைப்பார்கள். வெள்ளைப்படுதல் தெளிவான நீர்மமாகவும், துர்நாற்றமின்றி இருந்தால், அது ஒரு ஆரோக்கியமான உடல் நிலையைக் குறிக்கும். ஆனால், அது கெட்டியாகவோ அல்லது மஞ்சள் நிறத்திலோ, கடுமையான துர்நாற்றத்துடன் இருந்தால், அது அந்தரங்க பகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த பிரச்சினைக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சமநிலையின்மை, பாலியல் தொற்றுகள் போன்றவை முக்கிய காரணங்களாகும். இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனையை மருந்துகள் இல்லாமல் குணப்படுத்த உதவும் சில இயற்கை உணவுகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

வெள்ளைப்படுதலின் தீவிர விளைவுகள்:


பெண்களுக்கு இந்த வெள்ளைப்படுதல் முழு உடலையும் சோர்வடையச் செய்யும். இது உடலை பலவீனப்படுத்தி, நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும். துர்நாற்றம் மற்றும் அரிப்பு உள்ளிட்ட பல தொந்தரவுகளை ஏற்படுத்தும். இளம் பெண்கள் மட்டுமல்ல, கர்ப்பிணி பெண்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம். அதிக அளவு வெள்ளைப்போக்கு, வயிற்றுவலி அல்லது ரத்தப்போக்கு இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளைப்படுதல் அல்லது உடலுறவுக்குப் பின் ரத்தப்போக்கு போன்றவை புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். எனவே, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறிய "பேப்ஸ்மியர்" பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

vaginal-discharge-causes-and-when-to-worry

புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள்:


வெள்ளைப்படுதல் மட்டுமின்றி, 21 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க தடுப்பூசிகளும் உள்ளன. எனவே, மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

இயற்கை உணவுகள் மூலம் சிகிச்சை:


சாதாரண தண்ணீர் போன்ற வெள்ளைப்படுதல் இருந்தால், ஆரோக்கியமான உணவுகள் மூலம் அதைக் கட்டுப்படுத்தலாம்.


கொடிபசலைக் கீரை:


கொடிபசலைக்கீரை என்பது ஒரு கீரை வகை. இது கொடி போல படர்ந்து வளரும் தன்மை கொண்டது. ஆங்கிலத்தில் இதை "மலபார் ஸ்பினாச்" என்று சொல்வார்கள். உடல் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் நல்லது. இதன் இலைகளையும், தண்டுகளையும் சமைத்து உணவில் பயன்படுத்தலாம். இந்தக் கீரை வெள்ளைப்படுதலைக் குறைக்க உதவுகிறது.

malabar-spinach-growing-guide-5219861-hero-dd2b99c4d87246c787fcfbfc34ee2eba.jpg

வெண்பூசணி விதைகள்:


வெண்பூசணி விதைகளை காயவைத்து பொடி செய்து, ஒரு டீஸ்பூன் அளவு பாலில் கலந்து குடிக்கலாம். இது உடல் வலுவை அதிகரிக்கும். அல்லது இந்த வெண்பூசணி விதைகளை நெய்யில் வறுத்து சாப்பிடலாம்.


நன்னாரி தாவரம்:


நன்னாரியின் இலைகள் மற்றும் வேர்களை நெய்யில் வதக்கி, மிளகு, இந்துப்பு மற்றும் புளி சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை விரைவில் குணமாகும்.

nannari

கொய்யா இலைகள்:


கொய்யா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை குளிர வைத்து குடிக்கலாம். இதை தொடர்ந்து 2 வாரங்கள் வெறும் வயிற்றில் தினமும் காலையில் குடிக்க வேண்டும்.

மேலும் படிக்க: மாதவிடாய் நாட்களில் எடை அதிகரிக்க காரணம் என்ன? இதை கட்டுப்படுத்துவது எப்படி?

காசினி கீரை:


வெள்ளைப்படுதல் பிரச்சனையை குணப்படுத்த காசினி கீரையை உணவில் சேர்த்து சாப்பிடலாம். அல்லது காசினி பொடியை தேனில் கலந்து 21 நாட்கள் காலையில் குடிக்கலாம்.


நெல்லிக்காய் மற்றும் தனியா விதைகள்:


வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காயை தினமும் சாப்பிடலாம். அதே போல தனியா விதைகளை இரவில் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் அந்த தண்ணீரை குடிக்கலாம்.

இந்த இயற்கை உணவு முறைகள் ஆரம்ப கட்ட பிரச்சனைகளுக்கு உதவும். ஆனால், கடுமையான வெள்ளைப்படுதல் அல்லது தொடர்ச்சியான அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை பெற வேண்டும்.

Image source: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP