
மாதவிடாய் வருவதற்கு 1 வாரத்திற்கு முன்பு இருந்தே ப்ளோடிங் என்று சொல்லக் கூடிய வயிற்று கனம் சில பெண்களுக்குத் தொடங்கி விடும். வயிறு வீங்கி இருப்பது போன்ற ஒரு உணர்வைக் கொடுக்கும், இது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். ஹார்மோன் சமநிலையில் ஏற்படும் மாற்றத்தால் பெரும்பாலான பெண்கள் அனுபவிக்கும் உடலியல் மாற்றமாகும்.
ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்கள் பெண்களின் மாதவிடாய் சுழற்சி முறைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது, இந்த வீக்க உணர்விற்குக் காரணம் பெரும்பாலும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகும். இவை மாதவிடாய் சுழற்சி முழுவதும் மாறிக்கொண்டே இருக்கும் பெண் ஹார்மோன்கள்.
பெங்களூரூவில் உள்ள Cloud Nine மருத்துவமனையில் உள்ள மூத்த ஆலோசகர், மகப்பேறு மருத்துவர் மற்றும் இனப்பெருக்க நிபுணர், டாக்டர் லாவண்யா கிரண் அவர்களிடம் பேசினோம், மாதவிடாயின் போது ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள், அறிகுறிகள் மற்றும் அவற்றை எவ்வாறு குறைப்பது என்றும் பகிர்ந்துள்ளார்.
இதுவும் உதவலாம்:மாதவிடாய் நாட்களில் பெண்கள் செய்யக்கூடாத விஷயங்கள்
வயிறு கனமாக இருக்கும் நேரத்தில் விதவிதமாக சாப்பிடவும் தோன்றும் ஆனால் நீங்கள் சாப்பிடுவதைப் பற்றி எப்போதும் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் அதிக பதப்படுத்தப்பட்ட உணவைச் சாப்பிட்டால், அது அறிகுறிகளை மேலும் மோசமாக்கும்.

டாக்டர் கிரண் கூறுகிறார், மாதவிடாய் சுழற்சி நாட்களில் இரவு நேரத்தில் சீரான தூக்கம் மிக அவசியம்., உங்கள் தூக்க அட்டவணையைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் , குறிப்பாக மாதவிடாய் காலத்தில்.
நீங்கள் நன்றாகத் தூங்கவில்லை என்றால், நீங்கள் நாள் முழுவதும் சோர்வாக உணர்கிறீர்கள். இந்த நிலை உங்கள் அறிகுறிகளை மோசமாக்கும் மற்றும் உங்கள் அன்றாட வழக்கத்தைப் பாதிக்கும்.

டாக்டர் கிரண் கருத்துப்படி, மாதவிடாய் சுழற்சி முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு ப்ளோட்டிங் வாய்ப்பு குறைவு. வீக்கமான உணர்வு இருந்தாலும் , அறிகுறிகள் சமாளிக்கக்கூடிய அளவில் தான் இருக்கும்.
மாதவிடாயின் போது, மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதை அவர் பரிந்துரைக்கிறார். எவ்வாறாயினும், ஒரு தீவிர உடற் பயிற்சிக்குப் பதிலாக லேசான பயிற்சிகளைத் தேர்வு செய்யலாம். நீச்சல், யோகா (அடிப்படை யோகா பயிற்சிகள்) போன்றவை இந்த பிரச்சனைக்கு உதவும்.

பதப்படுத்தப்பட்ட சர்க்கரை மற்றும் இனிப்பு பானங்களைக் குறைக்கப் பரிந்துரைக்கிறார். இது அறிகுறிகளை அதிகரிக்கலாம் அல்லது பிடிப்புகளை மோசமாக்கலாம். பிஎம்எஸ் அல்லது மாதவிடாய் காலங்களில் வீக்கம் உணர்வு ஏற்பட்டால், நீங்கள் காஃபின், கடையில் வாங்கும் பானங்கள், குளிர்பானங்கள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
காஃபின் உட்கொள்வதால் குடல் எரிச்சல் நோய்க்குறி(Irritable bowel syndrome) அல்லது செரிமானப் பாதை பிரச்சனைகள் ஏற்படலாம். காபி மற்றும் ஆல்கஹால் நீரிழப்பை ஏற்படுத்துகிறது, இதனால் உங்கள் உடல் தண்ணீரைத் தக்கவைத்துக் கொள்வது கடினம்.
டாக்டர் கிரண் கூறுகையில், மாதவிடாய் காலத்தில் பெண்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குளிர்ந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்குப் பதிலாக புதிய மற்றும் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
புரதங்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவுப் பொருட்கள் வீக்கத்தைக் குறைக்க உதவும் என்று அவர் பரிந்துரைக்கிறார். பட்டியலில் வாழைப்பழங்கள், தக்காளி, பச்சை இலைக் காய்கறிகள், வெள்ளரி, தக்காளி, இனிப்பு உருளைக்கிழங்கு, அன்னாசி, பூண்டு, இஞ்சி போன்றவை அடங்கும்.
காலிஃபிளவர், முட்டைக்கோஸ், பீன்ஸ், ப்ரோக்கோலி மற்றும் கீரை போன்ற உணவுப் பொருட்களிலிருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும். இந்த காய்கறிகள் வாயு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். வீட்டில் சமைத்த உணவை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
இதுவும் உதவலாம்:மாதவிடாய் வலியை எளிதில் போக்க என்ன குடிக்கலாம்?
உங்கள் அறிகுறிகளைக் கண்காணிக்கவும் டாக்டர் கிரண் வலியுறுத்துகிறார். வீக்கமும் அதன் வலிமிகுந்த அறிகுறிகளும் மாதவிடாய்க்குப் பிறகும் தொடர்ந்தால் மற்றும் உங்கள் அன்றாட வழக்கத்திற்கு இடையூறாக இருந்தால், நீங்கள் உங்கள் மகளிர் மருத்துவ நிபுணரை அணுக வேண்டும். மருத்துவர் சில சோதனைகளை நடத்தி, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உங்களுக்குச் சிறந்த யோசனையை வழங்குவார்கள்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com