women problem big

பெண்களின் வாழ்க்கைமுறை மாற்றங்களினால் வியாதியை உண்டாக்க கூடிய 5 காரணிகள்!!!

பெண்களே, வாழ்க்கையில் நீங்கள் செய்ய கூடிய மாற்றங்களினால் ஏற்படும் நோய் குறித்து இப்போது படித்தறிந்து பயன் பெறலாம்.
Editorial
Updated:- 2022-11-16, 09:33 IST

எந்தவொரு பெண்ணுக்கும், அவளுடைய வாழ்க்கை முறை மாற்றத்தினால் நோய்களை ஏற்படுத்த பல காரணங்கள் உள்ளன.

இன்றைய நாளில், பெண்களின் வாழ்க்கை முறை காரணமாகவும், அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் காரணமாகவும் பல வகையான நோய்கள் வருகின்றன. நோய்வாய்ப்படுவது எல்லோருக்குமே பொதுவாக வரும் பிரச்சனை தான். ஆனாலும், பெண்கள் ஒப்பீட்டளவில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கை முறை காரணமாக பல நோய்கள் பெண்களை பாதிக்கிறது. இவை இதய நோய் முதல் வலிப்பு வரை என, சர்க்கரை வியாதி, உடல் பருமன் பிரச்சனை, வளர்ச்சிதை மாற்ற பிரச்சனை என பல உள்ளது. இவை போன்ற உடல் நல பிரச்சனைகள், அவர்களுடைய பாதிப்பை மேலும் மோசமடைய செய்யக்கூடும்.

எனினும், இந்த வாழ்க்கை முறையினால் வரும் நோய்களுக்கு முக்கிய காரணமும் பெண்களே தான். பல பெண்கள், அவர்களுடைய உடல் ஆரோக்கியம் குறித்து கவனமின்றி இருக்கிறார்கள். ஒருவேளை, அவர்கள் பணியில் உள்ள பெண்களாக இருப்பின், அவர்களின் வீட்டு வேலை மற்றும் அலுவலக பணியினை சமநிலைப்படுத்த இயலாமல் இது போன்ற நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்ல, அவர்களுக்கு வரக்கூடிய உடல் நல பிரச்சனைகளை அலட்சியமாக கருதுகிறார்கள். இதனால், அப்பிரச்சனை மேலும் மோசமடைகிறது. பெண்களுக்கு வரக்கூடிய வாழ்க்கை முறை வியாதிகளுக்கு பல காரணங்கள் உள்ளது. அவற்றுள் சில முக்கியமான காரணங்களை நாம் இந்த பதிவின் மூலமாக படித்தறிந்து பயன் பெறுவோம்.

ஆரோக்கியமற்ற உணவு முறை

women problem

பொதுவாக பெண்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு முறை தான். ஆரோக்கியமற்ற உணவு முறை என்பது சரியான நேரத்துக்கு சாப்பிடாமல் இருத்தல், அளவுக்கதிகமாக சாப்பிடுதல் போன்றவையாகும். இதன் காரணமாக நுண்ணிய ஊட்டச்சத்துக்கள் குறைபாடு பெண்களுக்கு உண்டாகிறது. இது போன்ற ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, உடல் செயல்பாடு சரியாக இருப்பதில்லை. இதனால் பெண்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்பட்டு பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.

மனஅழுத்தத்துடன் இருத்தல்

women problem

மன அழுத்தத்துடன் எப்போதும் இருத்தல், போதிய தூக்கமில்லாமல் இருத்தல், போதிய உடல் செயல்பாடின்றி இருத்தல் போன்ற காரணங்களினால் உடல் எடை அதிகரிக்கும். மனஅழுத்தம் மற்றும் தூக்கமின்மை, கார்டிசோல் எனப்படும் ஹார்மோன் அளவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடலில் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. கார்டிசோல், பசியினை அதிகமாக்கும். இதன் காரணமாக உடல் எடை கூடும். மேலும் இது, சர்க்கரை வியாதியை ஏற்படுத்தவும், இரத்த அழுத்தம் அதிகரிக்கவும், ஹார்மோன் பிரச்சனைகள் உண்டாகவும், PCOS போன்ற பிரச்சனைகள் பெண்களுக்கு வரவும் காரணமாகிறது.

வயது முதிர்வினால் வரும் ஆரோக்கிய பிரச்சனைகள்

women problem

பெண்களின் வயது அதிகரிக்க, அவர்களுடைய உடல்நல பிரச்சனைகளும் அதிகமாகும். 30 வயதின்போது, அவர்களுடைய உடலானது கால்சியத்தை இழக்கிறது. இதனால் அவர்களின் எலும்பு வலுவிழந்து காணப்படக்கூடும். கூடுதலாக, இதய நோய் மற்றும் சர்க்கரை வியாதி போன்றவை 35 வயதில் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, பெண்கள் அவர்களின் வயதினை பொறுத்து உடல்நலன் குறித்த பரிசோதனையை செய்து வருவது நல்லது. மேலும், அவர்கள் சாப்பிடும் உணவு குறித்தும் கவனத்தோடு இருக்க வேண்டும்.

புகைப்பிடித்தல்

சில பெண்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டிருப்பர். அவர்களுக்கு மன அழுத்தம் மிகுதியாகும். புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள ஆண்களை விட பெண்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்புள்ளதாக ஆய்வு கூறுகிறது. மேலும், புகைப்பிடிக்கும் பெண்களுக்கு இதய நோய், புற்றுநோய், டைப் 2 சர்க்கரை வியாதி போன்றவையும் வர வாய்ப்புள்ளது.

உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல்

women problem

பெண்களுக்கு வாழ்க்கை முறை தொடர்பான நோய்கள் வருவதற்கு பொதுவான காரணம் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது தான். இன்றைய நாளில், பெண்கள் வேலை செய்யும் நேரம் என்பது அதிகம். எனவே தான் அவர்கள் உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாமல் தவிக்கின்றனர். மேலும், இப்போதெல்லாம் நம்முடைய உடலை அசைத்து செய்யக்கூடிய வேலைகள் என்பது மிகக்குறைவே. இதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கிறது. உடல் எடை அதிகரிக்கும்போது, சர்க்கரை வியாதி, இதய நோய், இரத்த அழுத்த பிரச்சனை, ஹார்மோன் பிரச்சனைகள் போன்றவை வரலாம்.

அதனால், இது போன்ற தவறுகள் செய்வதை தவிர்த்து நோயின்றி ஆரோக்கியமாக வாழ இனிமேலாவது முயற்சி செய்யலாமே.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: freepik, shutterstock

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com