பெண்களுக்கு மார்பக வலி பல காரணங்களால் ஏற்படுகிறது. சில நேரங்களில் இதுப்போன்ற வலியை சமாளிக்க முடியாமல் பெண்கள் கஷ்டப்படுவதும் உண்டு. பெரிய மார்பகங்கள் கொண்டவர்கள் இந்த சிக்கலை அதிகம் எதிர்கொள்வார்கள். எந்த காரணமும் இல்லாமல் அவர்களுக்கு அடிக்கடி மார்பகங்கள் வலிக்கலாம். ஒருநாளைக்கு பலமுறை அவர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். தவறான பிரா அணிந்தாலும் இதுப்போன்ற வலி ஏற்படும்.
பெரிய மார்பகங்களை கொண்ட பெண்கள் சந்திக்கும் பிரச்சனையில் இதுவும் ஒன்று. அவர்களுக்கு அடிக்கடி மார்பக வலி மற்றும் முதுகு வலி ஏற்படலாம். இதற்கு இரவில் தூங்கும் முறை கூட காரணமாக இருக்கலாம். தூங்கும் முறையால் பெண்களுக்கு ஏன் மார்பக வலி ஏற்படுகிறது என்பதை இந்த பதிவில் சொல்கிறோம். படித்து பயனடையுங்கள்.
மார்பக வலி குறித்த ஆராய்ச்சி முடிவுகள்
தேசிய உயிரி தொழில்நுட்பவியல் தகவல் மையம் (NCBI) நடத்திய ஆய்வில் சுமார் 70% பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் மார்பக வலியால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சுழற்சி முறையாக வரலாம். (மாதவிடாய் நாட்களுக்கு முன்பு அதிகமாக வலிக்கலாம்) அல்லது சுழற்சி அல்லாத முறை (மாதவிடாய் நாட்களுக்கும் இதற்கு தொடர்பு இருக்காது). அறிவியல் மொழியில் இது ’மாஸ்டால்ஜியா’ என்று அழைக்கப்படுகிறது.
மார்பக வலிக்கும் தூங்கும் முறைக்கும் உள்ள தொடர்பு

தூங்கும் நிலை மற்றும் மார்பகம் குறித்து பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இதிலிருந்து நமக்கு தெரிய வரும் விஷயம் என்னவென்றால் தூங்கும் நிலை மார்பகத்தில் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் குப்புற படுத்து வயிற்றால் தூங்கும் போது மார்பகங்களின் வடிவம் மற்றும் தசைகள் வித்தியாசமாக மாறும். உங்கள் மார்பகங்களை இரண்டு தனித்தனி உறுப்புகளாக கருத வேண்டும். உடலில் உள்ள மற்ற உறுப்புகளை போலவே உங்கள் மார்பகங்களும் ஹார்மோன் பிரச்சனைகள், தூங்கும் நிலை, வாழ்க்கை முறை தவறுகளால் பாதிக்கப்படுகின்றன.
மார்பகங்களில் உணர்திறன் திசுக்கள் உள்ளன. அதே போல் கொழுப்பும் மார்பகங்களை பாதிக்கிறது. நீங்கள் குப்புற படுத்து வயிற்றால் தூங்கும் போது மார்பில் தேவையற்ற அழுத்தம் ஏற்படுகிறது. இது வலியை ஏற்படுத்தும். தொடர்ந்து இப்படியே தூங்கினால் வலி இன்னும் அதிகமாகும். நீங்கள் பக்கவாட்டில் படுத்து தூங்கும் போது ஈர்ப்பு விளைவு மார்பகத்தின் மீது விழுகிறது. இதனால் மார்பகங்கள் விரைவில் தளர்ந்து விடும் பிரச்சனையும் ஏற்படலாம். இந்த காரணங்களால் பெண்கள் மார்பக தசைகளில் காயம் அல்லது தோல் பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.
இப்படியே நீண்ட நேரம் தூங்கினால் மார்பகத்தின் வடிவம் மாறிவிடலாம் என்கிறது அறிக்கை. எனவே குப்புற படுத்து வயிற்றால் தூங்குவது மார்பகங்களுக்கு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
தூங்குவதற்கு சரியான முறை

மார்பகங்களை பொறுத்தவரையில் முதுகில் தூங்குவது அதாவது மல்லாந்து படுத்து தூங்குவது சிறந்தது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது மார்பகங்கள் உங்கள் கைகள் மற்றும் உடலின் கீழ் இருக்காது. இதனால் நீங்கள் மிகவும் வசதியாக தூங்க முடியும். பெரிய மார்பகங்கள் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை பற்றி தெரியும். இதனுடன், முதுகில் தூங்குவதன் மூலம் கிடைக்கும் நன்மை என்னவென்றால் உங்கள் மார்பகத்தின் அழுத்தத்தை முதுகு தாங்கும். எனவே மார்பகத்தின் கனத்தை நீங்கள் உணர மாட்டீர்கள்.
நீங்கள் மல்லாந்து படுத்து தூங்குவது மற்றும் உங்கள் முழங்கால்களுக்கு கீழ் ஒரு தலையணையை வைத்து படுப்பது ஆகியவை தூங்குவதற்கான சரியான முறையாகும். இது ரத்த ஓட்டத்துக்கும் நல்லது. நீங்களும் கொஞ்சம் நிம்மதியாக தூங்குவீர்கள்.
பிரா அணியாமல் தூங்குவது இன்னும் சிறப்பான முறையாகும். ஆனால் சிலருக்கு அது பிடிக்காது. ஒருவேளை நீங்கள் பிரா அணிந்து கொண்டு தூங்கினால் மென்மையான கப் பிராவை பயன்படுத்துங்கள். இதனால் மார்பகமும் அழுத்தம் இல்லாமல் இருக்கும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்..
Images Credit:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation