நிபா வைரஸ் பாதிப்பால் கேரளத்தில் 24 வயது இளைஞர் உயிரிழந்தையடுத்து மாநிலம் முழுவதும் தீவிர பரிசோதனை. தமிழக- கேரள எல்லைகளும் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளத்தில் அவ்வப்போது பரவக்கூடிய புதுவிதமாக வைரஸ்களால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு அசுத்தமான உணவுகள் மூலமாகவும், விலங்குகள் மற்றும் தொற்று மூலமாகவும் காற்றில் வேகமாக பரவிய நிபா வைரஸ் தீவிர மருத்துவ கண்காணிப்பிற்குப் பிறகு கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக நிபா வைரஸின் தாக்குதல் மிகுந்த தீவிரம் அடைந்து வருகிறது. என்ன தான் மருத்துவ கட்டுப்பாடுகள் இருந்தப்போதும் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் உயிரிழந்ததையடுத்து மக்கள் பெரும் பயத்தில் உள்ளனர்.
இந்நிலையில் கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், நிபா வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இதன் படி, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளை மூடவும், பொதுக்கூட்டங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள கடைகளும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பொது இடங்களுக்குச் செல்லும் போது கட்டாயம் முக கவசம் செய்ய வேண்டும் என மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பாதுகாப்பு தீவிரம்:
பொதுவாக கேரளத்தில் எந்த நோய்த்தாக்குதல் ஏற்பட்டாலும் உடனடியாக பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது தமிழ்நாடு. அந்தளவிற்கு இரு மாநிலங்களுக்கு இடையேயான தொழில் நிமிர்த்தமாக, சுற்றுலா செல்வது என பல போக்குவரத்துக்கள் உள்ளது. எனவே தான் பறவை காய்ச்சல், கொரோனா தொற்று போன்ற பல வைரஸ் பாதிப்புகள் ஏற்படும் போதெல்லாம் தமிழக- கேரள எல்லைகளில் தீவிர மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுவது வழக்கமான ஒன்று.
தற்போது நிபா வைரஸ் எதிரொலியாக தமிழக - கேரள எல்லைகளில் மருத்துவ குழுவினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கோவை மாவட்டத்தின் தமிழக கேரள எல்லையான வாளையாறு, முள்ளி மீனாட்சிபுரம், மணக்காடு, செம்மனாம்பதி உள்ளிட்ட 13 சோதனை சாவடிகளில் மருத்துவக் குழுவினர் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போன்று தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லையான கூடலூர், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் போன்ற பல பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து தமிழகத்திற்கு வரக்கூடிய வாகனங்கள், கார்கள், பஸ்கள் போன்றவற்றை தீவிரமாக பரிசோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக- கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் யார் இருந்தாலும் உடனடியாக சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation