
தண்டுவட மரப்பு நோய் என்பது மூளை மற்றும் முதுகு தண்டுவடத்தை தாக்கும் ஒரு நாள்பட்ட நோயாகும். இந்நோயால் உடலின் செயல்பாடுகள் மற்றும் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படலாம். இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உள்ள பாதுகாப்பு அடுக்குகளை தாக்குகிறது. இந்த அடுக்குகளில் உள்ள நரம்புகளுக்கு ஏற்படும் தாக்கத்தினால் மூளை மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இடையேயான தொடர்பு பாதிக்கப்படைகிறது.
தண்டுவட மரப்பு நோய் நரம்புகளுக்கு சேதம் மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தும். இதன் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடலாம். இந்த அறிகுறிகள் கடுமையாகும் பொழுது நோயாளியால் நடக்க முடியாமல் போகலாம். தற்போது வரை இந்த நோயை குணப்படுத்துவதற்கான சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும் இந்த அறிகுறிகளை கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சைகள் உள்ளன. தண்டுவட மரப்பு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதன் அறிகுறிகளை டாக்டர் மணீஷ் மகாஜன் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: ஹார்மோன் சமநிலைக்கு உதவும் நிபுணரின் ஒரு நாள் டயட் பிளான்

சேதமடைந்த நரம்புகள் மற்றும் நோயின் காலத்தைப் பொறுத்து இதன் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும். இந்த நோயின் பொதுவான சில அறிகுறிகளை மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
தண்டுவட மரப்பு நோய் ஒரு ஆட்டோ இம்யூன் நோய் என்பதால், இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் அதன் சொந்த நரம்புகளைத் தாக்குகிறது. இந்நோய் வருவதற்கான ஆபத்து காரணிகளை மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
உலக மல்டிபிள் ஸ்களீரோசிஸ் தினமான இன்று, இந்நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களின் அந்தரங்க உறுப்புகளை சுத்தம் செய்ய சரியான வழிகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com