
நமது உடலின் சில பகுதிகள் மிகவும் மென்மையானவை, பல பெண்களுக்கு தனது உடலில் உள்ள மென்மையான பகுதிகளை சுத்தம் செய்ய தெரியவில்லை, வெளியில் கேட்கவும் தயங்குவாரக்ள். குறிப்பாக பிறப்புறுப்பு சுத்தம் செய்வதை கேட்டு தெரிந்துகொள்ள அச்ச படுவார்கள். ஆனால் பிறப்புறுப்பு சரியாக சுத்தம் செய்வது மிகவும் அவசியம். இல்லையெனில், தொற்று பிரச்சனை ஏற்படலாம்.
முழு உடலையும் சுத்தம் செய்வது எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் முகத்தை சுத்தம் செய்ய ஃபேஸ் வாஷ், முடியை சுத்தம் செய்ய ஷாம்பு மற்றும் உடல் உறுப்புகளை சுத்தம் செய்ய சோப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்வதில்தான் சிக்கல், சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் நாம் தெரிந்துகூட வைத்திருப்பதில்லை.
இந்த பதிவும் உதவலாம்:PCOS பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?
பல பெண்களுக்கு அந்தரங்க உறுப்பைச் சுத்தம் செய்யக்கூடத் தெரியாமல் இருப்பர்கள். அந்தரங்க உறுப்பைக் கழுவுவதற்கான சரியான வழி என்னவென்று இன்னும் தெரியவில்லையா? அதனால் கவலைப்படாதீர்கள்! டாக்டர் குல்பஹர் அன்சாரி (B.U.M.S) அந்தரங்க உறுப்பைச் சுத்தம் செய்வது பற்றி பல வழிகளை பரிந்துரைத்துள்ளார்.
அந்தரங்க உறுப்பைச் சுத்தமாக வைத்திருக்காவிட்டால், அது பல கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும் என்கிறார் டாக்டர் குல்பஹர் அன்சாரி. எனவே அந்தரங்க உறுப்பைச் ஏன், எப்படி சுத்தம் செய்யலாம் என்பதை அறிவது அவசியம். இன்று இந்த கட்டுரையில், அந்தரங்க உறுப்புகளை சுத்தம் செய்யும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம்.
இப்போதெல்லாம், பல்வேறு வகையான சோப்புகள் சந்தையில் கிடைக்கின்றன, இதில் கடினமான கெமிக்கல் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சோப்புகள் அதிக pH அளவைக் கொண்டுள்ளன, இது அந்தரங்க பகுதிக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக அந்தரங்க பகுதி மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதியாகும், மேலும் கெமிக்கல் சோப்புகளைப் பயன்படுத்துவது பிறப்புறுப்பின் எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அந்தரங்கப் பெண்ணுறுப்பை சுத்தம் செய்வதற்காக முறையாக கழுவும் முறை பின்பற்றப்படுகிறது. பிறப்புறுப்புடன், சுற்றியுள்ள பகுதிகளும் இந்த நேரத்தில் சுத்தம் செய்யப்படும். நெருக்கமான கழுவுதல் என்பது சாதாரண சோப்புடன் பிறப்புறுப்பை சுத்தம் செய்வதைக் குறிக்காது.
இந்த பதிவும் உதவலாம்:சிறுநீர் கழிப்பதில் சிரமமா? இதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்
பிறப்புறுப்பு பகுதி எவ்வளவு மென்மையானது என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் பீரியட்ஸின் போது காட்டன் உள்ளாடைகளைப் தேர்வு செய்வது அவசியம். இதனால் அரிப்பு போன்ற பிரச்சனைகள் வராது. மற்ற உள்ளாடைகள் பயன்படுத்துவது மூலம் துர்நாற்றம் அல்லது எரிச்சல் போன்ற அனைத்து வகையான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும், குறிப்பாக கோடை காலங்களில். அதனால்தான் காட்டன் உள்ளாடைகளைப் பயன்படுத்துவது சிறந்த வழியாகும்.
இப்பொதெல்லம் டாய்லெட் பேப்பர் அதாவது டிஷ்யூ பேப்பர் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் மக்கள் சிறுநீர் அல்லது மலம் கழித்த பிறகு டிஷ்யூ பேப்பரைப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் விரும்பினால், உங்கள் பிறப்புறுப்புயை சுத்தம் செய்ய தண்ணீரை பயன்படுத்தலாம்.
பிறப்புறுப்புயை தண்ணீரில் சுத்தம் செய்வதால் பியூரினில் இருக்கும் சிறுநீரின் அனைத்து துளிகளையும் நீக்குகிறது, ஆனால் அதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் பிறப்புறுப்புயை ஈரமாக வைத்திருப்பதால் பாக்டீரியாக்கள் வளரும் அபாயம் அதிகம்.
இந்த விஷயங்களை மனதில் வைத்து, பிறப்புறுப்புயை சுத்தம் செய்யலாம். உங்கள் மனதில் ஏதேனும் கேள்வி இருந்தால், கீழே கருத்து தெரிவிப்பதன் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க, கருத்து தெரிவிப்பதன் மூலம் எங்களிடம் கூறுங்கள் மற்றும் எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com

