
சிலர் தங்கள் வயதை விட வயதானவர்களாக இருப்பதை பார்த்திருப்போம். சில பெண்களின் முகத்தில் வயதுக்கு முன்னரே முதுமை தோன்றத்தை அடைகிறார்கள். அதே நேரத்தில் சில பெண்கள் தங்கள் வயதை விட 10 வயது இளமையாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் சரியான சரும பராமரிப்பு, ஹார்மோன் சமநிலையின்மை, மன அழுத்தம் மற்றும் சுகாதார நிலைமைகள் ஆகியவையும் இதில் அடங்கும். சில ஆரோக்கியமான பழக்கங்களை கடைப்பிடித்தால் வயதை விட இளமையாக தோற்றமளிக்கலாம். இதுபோன்ற 5 விஷயங்களைப் பற்றி பார்க்கலாம், அதை நீங்கள் தினமும் காலையில் செய்து வந்தால் வயதை விட 10 வயது இளமையாக இருப்பீர்கள். இது குறித்து டயட்டீஷியன் மன்பிரீத் தகவல் அளித்துள்ளார். மன்பிரீத் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
மேலும் படிக்க: கோடை காலத்தில் அடிக்கடி சளி பிடித்தால்... இந்த நோய்களுக்கான ஆபத்து இருக்கலாம்

ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்க நம் உடலை உள்ளேயும் வெளியேயும் சுத்தம் செய்வது அவசியம். பல வகையான நச்சுகள் மற்றும் பாக்டீரியாக்கள் நம் நாக்கில் குவிந்து கிடக்கின்றன. தினமும் காலையில் செப்பு ஸ்கிராப்பரால் நாக்கை சுத்தம் செய்து வந்தால் நச்சுகள், பாக்டீரியா மற்றும் வாய் துர்நாற்றத்தை நீக்கும்.
காலையில் எழுந்தவுடன் சூரிய ஒளியை சில நிமிடங்கள் எடுக்க வேண்டும். சூரிய ஒளியில் சிறிது நேரம் நடக்கலாம் அல்லது உட்காரலாம். இது கார்டிசோல் ஹார்மோனின் அளவை சமப்படுத்துகிறது, உடலுக்கு வைட்டமின் D வழங்குகிறது மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கும் முக்கியமானது.

வயதை விட இளமையாக தோற்றமளிக்க ஆரோக்கியமான உணவுமுறை மிகவும் அவசியம். புரதம் நிறைந்த காலை உணவை உண்ணுங்கள். இது தவிர காலையில் உணவில் சில ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நட்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள். இது உடலுக்கு புரதத்தை வழங்குகிறது, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கிறது.
ஆரோக்கியமாக இருக்க யோகா மற்றும் உடற்பயிற்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் உண்மையான வயதை விட இளமையாக இருக்க விரும்பினால், அனுலோம்-விலோம் தினமும் செய்யுங்கள். இது மன அழுத்தத்தைக் குறைத்து உடலில் ஆக்ஸிஜன் ஓட்டத்தை அதிகரிக்கிறது.

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது நற்பண்புகளின் பொக்கிஷம். நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இதில் காணப்படுகின்றன. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு செப்பு பாத்திரத்தில் சுமார் 300 மில்லி தண்ணீரை எடுத்துக் கொள்வதால் இளமையை தக்க வைத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க: சத்துகள் நிறைந்த நெல்லிக்காயை ஈசியா உணவில் சேர்த்துக்கொள்ள 5 வழிகள்
இந்த பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நீங்களும் உங்கள் உண்மையான வயதை விட இளமையாக இருக்க முடியும். மேலும், இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மற்றும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.
Image Credit- freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com