சில வாழ்க்கை முறை மாற்றங்கள், நல்ல உணவு, உடற்பயிற்சி, போதுமான தூக்கம் மற்றும் சீக்கிரம் எழுந்திருத்தல் போன்றவை உங்களை ஆரோக்கியமாகவும், மன அழுத்தமில்லாமல் வைத்திருக்கவும் உதவி செய்கிறது. இதனுடன் உணவில் சில பழங்களைச் சேர்த்துக்கொள்வதன் மூலமும் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அத்தகைய பழங்களில் ஒன்று பேரீச்சம்பழம் இது உடலுக்கு பல நன்மைகளைத் தரும். பேரீச்சம்பழத்தை ஊறவைத்து சாப்பிடுவதால் டானின் / பைடிக் அமிலத்தை நீக்குகிறது. இதனால் ஊறவைத்த பேரீச்சம்பழம் எளிதில் ஜீரணமாகும். பேரீச்சம்பழத்தின் சுவை மற்றும் முழுமையான ஊட்டச்சத்துகளை பெற இரவு முழுவதும் 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
மேலும் படிக்க: கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து ஓட விடும் 4 முக்கிய மசாலாப் பொருட்கள்
காலையில் வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டுவதை தினமும் வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பேரீச்சம்பழத்தை பச்சையாக சாப்பிடலாம் அல்லது இரவில் தண்ணீரில் ஊறவைத்தும் சாப்பிடலாம். ஆனால் தினமும் சாப்பிடுவதை வழக்கமாக கொள்வது நல்லது. ஏனெனில் இது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தரக்கூடியது. பெரும்பாலான மக்கள் பேரீச்சம்பழம் இயற்கையில் சூடாக இருக்கும் என்று நம்புகிறார்கள். பேரீச்சம்பழத்தின் தன்மை மிகவும் குளிர்ச்சியாகவும், உடலில் சமநிலை படுத்தவும் உதவுகிறது. பேரீச்சம்பழம் சாப்பிட சுவையாக இருப்பதைத் தவிர, பல நன்மைகளையும் நமக்குத் தருகிறது. இந்த நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆரம்பத்தில் 2 மட்டும் சாப்பிடுங்கள். இதற்குப் பிறகு தினமும் 4 ஊறவைத்த பேரீச்சம்பழம் சாப்பிடுங்கள்.
உடல் எடையை அதிகரிக்க வேண்டுமானால் தினமும் 4 பேரீச்சம்பழம் சாப்பிட வேண்டும். ஆனால் செரிமானம் நன்றாக இருந்தால் மட்டுமே. குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த பேரீச்சம்பழம் சிறந்தது. குறைந்த எடை, குறைந்த ஹீமோகுளோபின் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் தினமும் பேரீச்சை சாப்பிடலாம். 2-3 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: கடின உழைப்பை செலுத்தாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் தொப்பையை குறைக்க எளிய பயிற்சிகள்
பேரீச்சம்பழம் சாப்பிடுவதன் மூலமும் இந்த நன்மைகள் அனைத்தையும் பெறலாம். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com