
மக்களிடையே மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள், உடல் உழைப்பு இல்லாத வேலைகள் அனதை்தும் ஒரு வகையில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தினாலும், பல நேரங்களில் உடல் நல பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்துகிறது. இளம் வயதிலேயே இதய நோய், சிறுநீரக செயலிழப்பு உட்பட பல விதமான நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. இவற்றையெல்லாம் சரி செய்ய என்ன மாதிரியான உடற்பயிற்சிகளையெல்லாம் மேற்கொள்ள வேண்டும்? என்ற தேடல் அதிகளவில் உள்ளது. இதோ இன்றைக்கு மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள ஏரோபிக் உடற்பயிற்சி மற்றும் அதன் நன்மைகள் குறித்து இங்கே விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிங்க: கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக இருக்க பின்பற்ற வேண்டியது?
ஏரோபிக் உடற்பயிற்சிகள் பொதுவாக இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது. நீச்சல், சைக்கிளிங், நடைபயிற்சி போன்றவை குறைந்த தாக்கம் கொண்ட ஏரோபிக் பயிற்சிகள் என்றும், ஓடுதல், ஸ்கிப்பிங், போன்றவை உயர் தாக்கம் கொண்ட ஏரோபிக் உடற்பயிற்சியாகும். இவற்றை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது உடலுக்கு பல்வேறு நன்மைகளை உங்களுக்கு தரக்கூடும். நீங்கள் மேற்கொள்ளும் ஏரோபிக் உடற்பயிற்சி கவலையைக் குறைக்க உதவக்கூடிய சிறந்த வழியாக உள்ளது. நடைபயிற்சி அல்லது நீச்சல் போன்ற வழக்கமான ஏரோபிக் செயல்பாடுகளை மேற்கொள்ளும் போது உடல் பதற்றம் அடைவதைத் தடுக்கிறது. மேலும் மனநிலையை ஒழுங்குப்படுத்தவும் உதவுகிறது.
மேலும் படிங்க: எலும்புகளை வலுப்படுத்தும் ஆரோக்கிய பானங்கள்!
ஏரோபிக் உடற்பயிற்சியை மேற்கொள்வது உங்களது ஆரோக்கியத்திற்கு நல்ல கேம்- சேஞ்சராக அமையும் என்றாலும் இதய நோய் உள்ளிட்ட பல உடல் நல பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில், மருத்துவரின் பரிந்துரை மிகவும் முக்கியம். எனவே மருத்துவ ஆலோசனைப் பின்னதாக குறைந்த தாக்கம் கொண்ட ஏரோபிக் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள மறந்துவிடாதீர்கள்.
Image Credit: Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com