
மதிய நேரத்தில் எந்த உணவு சாப்பிட்டாலும் அதோடு இரண்டு அப்பளம் இருந்தால் வயிறு நிரம்பியது போல உணர்வோம். மொறுமொறு சுவை கொண்ட அப்பளம் தென் இந்தியாவில் மிகவும் பிரபலமானது. சாம்பார் சாதம் - அப்பளம், பருப்பு சாதம் - அப்பளம், ரசம் சாதம் - அப்பளம்; இந்த காம்போக்களை விரும்பாத நபர்களே இருக்க முடியாது. அப்பளம் அதன் செய்முறையை வைத்து வடிவங்களில் வேறுபடுகிறது. வெயிலில் காய வைக்கப்படும் அப்பளம் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்தது. இதை நாம் எண்ணெய்-ல் பொரித்து அல்லது சுட்டு சாப்பிடுகிறோம். அப்பளத்தை அளவோடு அவை உடலுக்கு நன்மை பயக்கும். அளவுக்கு மீறினால் அப்பளமும் நஞ்சு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அப்பளம் தயாரிக்க உப்பு முக்கிய பொருளாகும். அப்பளத்தில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட அளவு உப்பு அவற்றுக்கு சுவை சேர்க்கின்றன. இந்திய உணவுகளின் செய்முறை உப்பு மற்றும் மசாலா பொருட்களை கொண்டது. நாம் உடலுக்கு தேவையான அளவை விட உப்பு உட்கொண்டால் இரத்தத்தில் உப்பு அளவு அதிகரிக்கும். அப்பளத்தில் உள்ள உப்பு (சோடியம்) உடலில் இரத்த அழுத்தம், நீர் தேக்கம், வயிறு உப்புசம், தாகம் அதிகரிப்பு மற்றும் சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.
ஒரு சில அப்பளங்களை தொடர்ந்து சாப்பிடும் போது அசிடிட்டி மற்றும் செரிமான பிரச்னைகள் ஏற்படும். அப்பளம் பிடிக்கும் என்ற காரணத்தினால் பலர் ஒரே வேளையில் 4-5 எண்ணிக்கை சாப்பிடுவர். இது உடலுக்கு நல்லதல்ல.

அப்பளத்தை அதிகளவில் சாப்பிடும் போது செரிமான சமயத்தில் அவற்றின் மாவு வயிற்றில் ஒட்டிக்கொள்ளும். இதனால் மலச்சிக்கல், வாயு தொல்லை ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும்.
ஒரே எண்ணெயில் அப்பளங்களை மீண்டும் மீண்டும் பொரித்தால் அதில் டிரான்ஸ் ஃபேட் அதிகமாகும் அல்லது எண்ணெயின் தரம் குறைந்து உடலுக்கு தீங்காக அமையும். நமக்கு சந்தைகளில் கிடைக்கும் பெரும்பாலான அப்பளங்கள் தரமற்றவை. இதனால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்து இதய பிரச்னை, சர்க்கரை நோய் ஏற்படலாம்.
அப்பளத்தை தயாரிக்க அவற்றை வெயிலில் வைத்தாக வேண்டும். அப்போது அவற்றின் தூய்மை கேள்விக்குறியாகிறது. மேலும் சுகாதாரமற்ற இடத்தில் வைக்கப்பட்டால் சாப்பிடும் நபருக்கு தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
மேலும் படிங்க குடற்புழுக்களின் அறிகுறிகளும், பாதிப்பை தடுப்பதற்கான வழிகளும்
அப்பளங்களை வறுக்கும் முறையும் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. அப்பளங்களை எண்ணெயில் வறுத்து அல்லது சுட்டு சாப்பிடுவதற்கு பதிலாக மைக்ரோவேவ் ஓவனில் வறுத்து சாப்பிடுவது நல்லது. ஏனெனில் அக்ரிலாமைடு உருவாக்கம் குறையும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com