
குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டால் குடற்புழு தாக்கத்தினால் இருக்குமோ என்ற சந்தேகம் பெற்றோருக்கு உருவாகும். பூச்சி மருந்து கொடுத்தால் குடற்புழு பிரச்னை சரியாகி விடும் என நினைப்பர். மேலும் குழந்தைகள் அடிக்கடி சாக்லேட் சாப்பிட்டதன் விளைவாக வயிற்றில் புழு உண்டாகிவிட்டதென பெற்றோர் என நம்புகின்றனர். 6 மாதங்களுக்கு ஒரு முறை பெற்றோர் தாங்களாகவே குழந்தைகளுக்கு பூச்சி மருந்தை வலுக்கட்டாயமாக கொடுப்பதுண்டு. இதில் எதுவுமே உண்மை கிடையாது. உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பல வகையான புழுக்கள் உள்ளன. குடற்புழுக்கள் இனிப்பு சாப்பிடுவதால் மட்டும் வராது. கை கால்களை சரியாக கழுவாத பட்சத்தில் புழுக்களின் முட்டைகள் வயிற்றுக்குள் சென்று வளர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும். நடந்து செல்லும் போது அசுத்தத்தில் கால் வைத்தால் பாதம் வழியாக புழுக்கள் உள்ளே புகுந்து இரத்தத்தில் கலந்து வயிற்றில் வளரும்.

வயிற்றில் குடற்புழுக்கள் இருந்தால் சத்து குறைபாடு உண்டாகும். கழிவுகளில் இரத்தப் போக்கு தெரியும். இரத்த சோகைக்கான வாய்ப்புகளும் உண்டு.
மேலும் படிங்க இளம் வயதிலேயே தலைமுடி நரைப்பதற்கான காரணங்கள்! சிகிச்சை பலனளிக்குமா ?
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com