herzindagi
weight loss transformation women

3kg Weight Loss : ஒரே மாதத்தில் 3 கிலோ எடையை குறைக்க தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க!

சுத்தமான தேங்காய் எண்ணெயை சரியான அளவில், சரியான முறையில் குடித்து வர ஒரே மாதத்தில் 3 கிலோ வரை எடையை குறைக்கலாம்…
Updated:- 2023-09-07, 05:00 IST

தேங்காய் எண்ணெய் கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அழகு தரும் தேங்காய் எண்ணெய் உடல் எடையை குறைக்க உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதிகரிக்கும் உடல் எடையை பற்றிய கவலை இனி இல்லை. உடல் எடையை குறைக்க சுத்தமான தேங்காய் எண்ணெயை சரியான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து பின்பற்றினால் ஒரு மாதத்தில் நல்ல விளைவுகளை காணலாம்.

தேங்காய் எண்ணெயில் சமைக்கப்பட்ட உணவுகளில் சுவையும், மணமும் மட்டுமல்ல ஆரோக்கியமும் நிறைந்திருக்கும். இது உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள ட்ரைகிளிசரைடு என்ற தனிமம், உணவில் இருக்கும் சத்தான கூறுகளை பிரித்தெடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க தேங்காய் எண்ணெய் எவ்வாறு பயன் உள்ளதாக இருக்கும் என்பதை இன்றைய பதிவில் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: வாய் விட்டு சிரித்தால், இதய நோயும் விட்டு போகுமா?

உடல் எடையை குறைக்க உதவும் தேங்காய் எண்ணெய் 

weight loss tips

  • விஞ்ஞானிகளின் கருத்துப்படி தேங்காய் எண்ணெயில் மிகக் குறைந்த அளவிலேயே கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை உணவில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தரும் மற்றும் உடலில் கொழுப்பு சேர்வதையும் அனுமதிக்காது. தேங்காய் எண்ணெய்யில் உள்ள சத்துக்கள் கல்லீரலை சென்றடைவதன் மூலம் அதிகப்படியான கொழுப்பை குறைக்கிறது.
  • ஆராய்ச்சியின் படி, ஒரு டீஸ்பூன் வெர்ஜின் தேங்காய் எண்ணெயை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வளர்சிதை மாற்றம் அதிகரித்து கொழுப்பை விரைவாக குறைக்கலாம். இதை தொடர்ந்து பின்பற்றி வர ஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடையை குறைக்க முடியும்.
  • தேங்காய் எண்ணெய் உடலுக்கு சென்றவுடன் செல்களுக்கு ஊட்டமளிக்க தொடங்குகிறது. இதனால் கொழுப்பு உடனடியாக ஆற்றலாக மாற்றப்படுகிறது மற்றும் உடலில் கொழுப்பும் சேராமல் இருக்கும். நாள் முழுவதும் நாம் சாப்பிடும் உணவில் உள்ள கெட்ட கொழுப்புகள் உடலில் குவிந்து எடையை அதிகரிக்கின்றன. ஆனால் தேங்காய் எண்ணெயில் உள்ள ட்ரைகிளிசரைடு எனும் கொழுப்பு உணவில் உள்ள மற்ற கொழுப்புகளை விட மிகவும் ஆரோக்கியமானது.
  • தேங்காய் எண்ணெயில் செய்யப்பட்ட உணவை சாப்பிடுவதால் அடிக்கடி ஏற்படும் பசி உணர்வு நீங்கும். இதில் உள்ள கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்கள் பசியை கட்டுப்படுத்துகின்றன. வாயு, மலச்சிக்கல், வயிற்றுப் பொருமல் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படும் பெண்களுக்கு தேங்காய் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இது நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.
  • தேங்காய் எண்ணெயை தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு 3-4 முறை சிறிய அளவுகளில் எடுத்துக் கொள்ளலாம். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் எடைய குறைக்கவும் உதவும். இந்த கலவையானது உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதுடன், செரிமானத்திற்கும் உதவுகிறது. இது சருமம் சார்ந்த பல பிரச்சனைகளுக்கும் சிறந்த நன்மைகளை தரும்.

how to use coconut oil for weight loss

  • கொழுப்பை வேகமாக குறைக்க தினமும் 2 டீஸ்பூன் வீதம் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் 120 கலோரிகள் வரை குறைக்க முடியும். மேலும் தேங்காய் எண்ணெயில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
  • இன்றைய வாழ்க்கை சூழலில் பல பெண்களும் ஹார்மோன் சமநிலையின்மையால் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது. சமையலுக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் இ ரத்த சர்க்கரை மற்றும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கலாம். 
  • உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பான நீரில் கலந்து உடற்பயிற்சி செய்வதற்கு முன் குடிக்கலாம் மற்றும் சமையலுக்கும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.

குறிப்பு : உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சுத்தமான வெர்ஜின் தேங்காய் எண்ணெயை தங்கள் வழக்கத்தில் சேர்த்துக் கொண்டு பயன்பெறலாம். உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனை இருந்தால் உணவில் ஏதேனும் மாற்றங்களை செய்வதற்கு முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் காலையில் வெந்நீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com