சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பது என்பது அவ்வளவு கடினமான காரியம் இல்லை. சில வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் இதனை நாம் சரியாக செய்ய முடியும். அதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Pumpkin seeds for hair growth: முடி உதிர்வை தடுக்க உதவும் பூசணி விதைகள்; உங்கள் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ளவும்
அழகான, பொலிவான சருமத்தை பெற எல்லோருக்கும் ஆர்வம் இருக்கும். ஆனால் அதற்கு நாம் எடுக்கும் முயற்சிகள் பல சமயங்களில் தோல்வியிலேயே முடிகின்றன. இணையத்தில் தினமும் பல வகையான அழகு குறிப்புகள் புதுப்புது வடிவங்களில் வந்து கொண்டே இருக்கின்றன. சில குறிப்புகள் பலனளித்தாலும், பல குறிப்புகள் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் ஏமாற்றத்தையே தருகின்றன. அதனடிப்படையில், நமது சருமத்தை பொலிவாகவும், பளபளப்பாகவும் மாற்றத் தகுந்த 5 சிம்பிள் டிப்ஸை இந்தக் கட்டுரையில் காணலாம். இது பலருக்கும் உதவியாக இருக்கும்.
பல நடிகைகள் காலை எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுடிருப்பதாக கூறியுள்ளனர். இது முகத்திற்கு ஒரு விதமான பொலிவை அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நம் உடலில் வைட்டமின் ஏ-யின் அளவை நெய் அதிகரிக்கிறது. இது சருமத்தை உள்ளிருந்து ஊட்டமளித்து, அதன் தரத்தை பராமரிக்க உதவுகிறது. ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர் (moisturiser) போல செயல்பட்டு, நாள் முழுவதும் ஈரப்பதத்தை தக்கவைக்கிறது. மேலும், வீக்கம் மற்றும் சரும ஆக்சிஜனேற்றம் போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது.
தினமும் ஒரு பூண்டு பல்லை தண்ணீருடன் சேர்த்து சாப்பிடுவது முகப் பொலிவை கொடுக்கும் என்றும், பருக்களை குணப்படுத்தும் என்றும் கூறுகின்றனர். ஆனால், இது தொடர்பான முழுமையான அறிவியல் சான்றுகள் இல்லை என்று கூறப்படும் நிலையில், பூண்டில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஆரோக்கியமான சேர்மங்கள், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவலாம்.
சருமத்தின் ஈரப்பதத்தை மீட்டெடுக்க, வாஸ்லின் அல்லது கற்றாழை ஜெல்லை முகத்தில் பூசும் பழக்கம் பிரபலங்களிடையே பரவி வருகிறது. இது சேதமடைந்த சருமத்தை புதுப்பிக்கவும், சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் மாற்ற உதவுகிறது. எனினும், எண்ணெய் சருமம் உள்ளவர்கள் இந்த பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது சரும துளைகளை அடைத்து, அதிகப்படியான பருக்களை ஏற்படுத்தலாம்.
மேலும் படிக்க: பளபளப்பான சருமம் வேண்டுமா? இந்த மைசூர் பருப்பு ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க
ஐஸ் கட்டிகளை கொண்டு முகத்திற்கு ஒத்தடம் கொடுக்கும் பழக்கம் தற்போது இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இது முக வீக்கத்தை குறைக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. சில பெண்கள் முகப்பருக்களால் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் இதை நேரடியாக பயன்படுத்துகின்றனர். ஆனால், ஐஸ் கட்டிகளை நேரடியாக சருமத்தில் வைப்பது, குறிப்பாக சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தலாம்.
முகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சன்ஸ்கிரீனைப் பூசி, மற்ற பகுதிகளை அப்படியே வெயிலில் விடுவது சிக்கல்களை ஏற்படுத்தும். இதனால், முகத்தின் ஒரு சில பகுதிகள் கரும்புள்ளிகள் மற்றும் பொலிவின்மையால் பாதிக்கப்படும். இவை எரிச்சல் மற்றும் சருமத்தில் வேறு சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, சரியான முறையில் சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும்.
இது போன்ற சில எளிய செயல்முறைகளை பின்பற்றுவதன் மூலம் நம்முடைய சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com