Yellow teeth: பற்கள் நிறம் மாறாமல் தடுக்க என்ன செய்யலாம்?

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இளமையிலேயே பற்களின் நிறம் மாறிவிடுகிறது. அதற்க்கு காரணம் என்ன என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

 
yellow teeth prevention

பெரும்பாலானோருக்கு சர்க்கரை மாதிரி பற்கள் வெள்ளை நிறத்தில் இருக்காது. வெளிர் மஞ்சள், சந்தன நிறம், முத்து நிற வெள்ளை என நம் பற்களுக்கு இயற்கையாகவே பல நிறங்கள் உள்ளது. குழந்தை பருவத்தில் பல் முளைக்கும் போது வெள்ளை நிறத்தில் இருக்கும், ஆனால் இது வயது முதிர்ச்சிக்கு பிறகு அந்த பற்களின் பொலிவு குறைந்து கொஞ்சம் மஞ்சள் நிறத்துக்கு மாறிவிடும். நம் பற்களின் எனாமல் தேய்ந்து விடுவது தான் பல்லின் நிறமாற்றத்துக்கு அடிப்படைக் காரணம் என்று கூறப்படுகிறது. இது முதியவர்களிடையே அதிகம் காணப்படும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இளமையிலேயே பற்களின் நிறம் மாறிவிடுகிறது. அதற்க்கு காரணம் என்ன?

பற்கள் ஏன் நிறம் மாறுகிறது?

பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறினால் பற்களின் எனாமலில் கறை படிந்து பல்லின் நிறம் மாறுகிறது. புகைப்பழக்கம், வெற்றிலை பாக்கு, புகையிலை போடுவது, பான் மசாலா குட்காவைப் பயன்படுத்துவது போன்ற பழக்கங்கள் உள்ளவர்களுக்கு பற்களின் நிறம் நாளடைவில் காவி நிறத்துக்கு மாறும். இதற்கு காரணம், புகையிலையில் உள்ள நிகோடின் ரசாயனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக பற்கள் உறிஞ்சிக்கொண்டே இருக்கும்.

மேலும் படிக்க:தோல் நோய்கள் வராமல் தடுக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்க!

இனிப்பு வகை உணவுகள்:

அதே போல இனிப்பு வகை உணவுகளை அதிகம் சாப்பிடுவதும், குளிர்பானங்களை அடிக்கடி அருந்துவதும் பற்களின் நிறம் மாறுவதற்கு முக்கிய காரணம். டார்க் சாக்லேட், பிளாக் காபி, பிளாக் டீ, ரெட் ஒயின் ஆகியவற்றை அதிக அளவில் சாப்பிட்டால் எளிதில் பற்களின் நிறம் மாறிவிடும்.

காபியிலும் தேநீரிலும் உள்ள 'டானின்' ரசாயனம், ஒயினில் உள்ள 'பாலி பீனால்' எனும் ரசாயனம் பற்களில் நிறமாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதே போல சோயா சாஸ், வினிகர் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போதும் பற்களின் நிறம் மாறலாம். மேலும் பல்லில் சொத்தை ஏற்படுவது, விபத்தில் பற்கள் அடிபடுவது போன்ற காரணங்களால் பற்கள் கறுப்பு நிறத்துக்கு மாறிவிடும்.

ஆண்டிபயாடிக் மாத்திரைகள்:

கர்ப்பமாக உள்ள பெண்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சில ஆண்டிபயாடிக் மாத்திரைகளைச் சாப்பிடும் போது, அவற்றின் பக்கவிளைவாக அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்குப் பற்களில் நிறமாற்றம் காணப்படும். இது போல ரத்தசோகை நோய்க்கு இரும்புச் சத்து மாத்திரை மற்றும் டானிக்குகளைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக சாப்பிட்டு வந்தால் உங்கள் பற்களின் நிறம் கறுப்பாக மாறும்.

மஞ்சள் கறை நீக்க?

yellow teeth cure

புகையிலை காரணமாக கறை படிந்த பற்கள், பல் சொத்தை போன்ற டென்டல் பிரச்சினை உள்ளவர்கள், மாத்திரை மருந்துகளால் பற்களின் நிறம் மாறியவர்கள் ஆகியோருக்குப் பற்களின் மஞ்சள் நிறத்தை அகற்றி வெள்ளை நிறத்துக்குக் கொண்டு வர டூத் ஒயிட்டனிங் சிகிச்சை முறை மருத்துவமனைகளில் தற்போது செய்யப்படுகிறது.இந்த சிகிச்சையை ஆறு மாதத்துக்கு ஒருமுறை செய்து கொள்ளலாம். அப்படி செய்து வந்தால் உங்கள் பற்களின் நிறம் வெள்ளை நிறத்தில் மாறும். இதனை அடிக்கடி செய்யும்போது ஒரு சிக்கல் உள்ளது. அந்தப் பற்கள் விரைவில் வலுவிழந்து சிதைந்துவிடும்.

கறையை எப்படி தடுப்பது?

புகைப்பழக்கம், புகையிலை போன்ற பழக்கங்களை முதலில் நிறுத்த வேண்டும். ஐஸ் குளிர்பானங்கள் குடிப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும். மேலும் ப்ராஸஸ்ட் உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட வேண்டாம். மதுப்பழக்கம் அறவே கூடாது.

சாக்லேட், சர்க்கரை கலந்த இனிப்புகளைச் சாப்பிட்ட பிறகு வாயை நன்றாகக் கொப்பளிக்க வேண்டும். இதனால் பற்களில் ஒட்டியிருக்கிற சர்க்கரைப் படலம் எளிதாக நீங்கிவிடும். இது பற்களில் காரை படியாமல் இருக்க உதவும்.

டிவி விளம்பரங்களைப் பார்த்து தினமும் 'பளிச்' பற்களுக்கான புதிதாக டூத்பேஸ்ட் வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். பல டூத்பேஸ்ட்களில் 'பிளீச்சிங்' ரசாயனங்கள் உள்ளன. இவற்றால் சில நாட்களில் பற்கள் வெண்மையானது போல தோன்றும். ஆனால், நாளடைவில் பல்லின் எனாமல் கரைந்து பற்கள் சேதமடைய வாய்ப்புகள் அதிகம்.

மேலும் படிக்க:உடலில் வரும் தோல் வெடிப்புகளை எப்படி சரி செய்வது?

ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துவக்குவது அவசியம். மிருதுவான டூத் ப்ரஷ் கொண்டு அதில் பட்டாணி அளவுக்கு டூத்பேஸ்ட் எடுத்துக்கொண்டு அதிக பட்சம் ஐந்து நிமிடங்களுக்குப் பல் துலக்கினால் போதும். அதிக நேரம் பல் துலக்குவதாலோ, அழுத்தமாகத் துலக்குவதாலோ அதிக டூத்பேஸ்ட் கொண்டு துலக்குவதாலோ பற்கள் வெள்ளை நிறத்துக்கு மாறிவிடாது. ஜெல் பேஸ்ட் மற்றும் பல்வேறு நிறங்களில் உள்ள பேஸ்ட்களைப் பயன்படுத்த வேண்டாம். வெள்ளை நிறத்தில் இருக்கும் பேஸ்ட் மட்டுமே பயன்படுத்துங்கள் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP