herzindagi
sugar fennal big image

Sweet Fennel Prepare: பிரியாணிக்கு அப்புறம் கண்கள் தேடும் இனிப்பு பெருஞ்சீரகம்.. இனி வீட்டிலேயே செய்யலாம்

இனிப்பான பெருஞ்சீரகம் உண்பதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம். எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்
Editorial
Updated:- 2024-04-27, 21:59 IST

பெருஞ்சீரகம் என்று அழைக்கப்படும் சோம்பு  பெரும்பாலும் அனைவரின் வீட்டு சமையல் அறையிலும் உள்ளது. ஏனெனில் இது பல வீட்டு உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பல உணவுகளுக்கு நறுமணம் சேர்க்க பெருஞ்சீரகம் பயன்படுத்தப்படுகிறது. பெருஞ்சீரகத்தை டிஷ் இல்லாமலும் பலர் அப்படியே விரும்பி சாப்பிடுவார்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு உணவகத்திலும் பெருஞ்சீரகம் வாய் ப்ரெஷ்னராக வழங்கப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஏனென்றால் பெருஞ்சீரகத்தில் நறுமண எண்ணெய்கள் இருப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தடுக்க உதவுகிறது. அதே போன்று வயிற்றை சுத்தப்படுத்தவும் உதவியாய் இருக்கிறது. உணவகம் சென்று பிரியாணி சாப்பிடுவார்கள் கண்டிப்பாக கேஸ் கவுண்டர் பக்கத்தில் வைத்திருக்கும் இனிப்பு பெருஞ்சீரகத்தை ருசி பார்க்காமல் இருக்க மாட்டார்கள்.  உங்களுக்கு வேண்டுமானால் வீட்டிலேயே இனிப்பு பெருஞ்சீரகத்தை எளிதாக செய்யலாம். எனவே சுவையான இனிப்பு கருஞ்சீரகத்தை மிக எளிதாக குறைந்த நேரத்தில் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க: சைனஸ் பிரச்சனையால் கஷ்டப்படுகிறீர்களா? இதோ உங்களுக்கான நிரந்தர தீர்வு

முக்வாஸ் ஸ்வீட்  பெருஞ்சீரகம் 

சந்தையிலிருந்து வாங்குவதற்குப் பதிலாக, முகவாஸ் ஸ்வீட் பெருஞ்சீரகம் வீட்டிலேயே எளிதாக செய்யலாம், இது சாப்பிட சுவையாக மட்டுமல்ல ஆரோக்கியமாகவும் இருக்கும். இதை வட இந்தியாவில் அதிகம் செய்கிறார்கள்.

தேவையான பொருள்கள் 

  • 1 கப் - பெருஞ்சீரகம்
  • 1.25 கப் சர்க்கரை
  • அரை தேக்கரண்டி கேட்சு (Catechu)
  • அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு

செய்முறை

  • பெருஞ்சீரகம் நங்கு வாசனை வரும் வரை குறைந்த தீயில் வறுக்கவும்.
  • இதன்பிறகு ஒரு பாத்திரத்தில் பாதி சர்க்கரை சேர்த்து பின் அதில் அரை கப் தண்ணீர் மற்றும் ஊறவைத்த கேட்சு பவுடரை சேர்த்து கிளறி விடவும்.
  • இந்த பாகில் கேட்டி பதம் வந்தவுடன் அதில் பாதி அளவு வறுத்த பெருஞ்சீரகம் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
  • சிரப் கெட்டியாகி பெருஞ்சீரகம் மிது பூசத் தொடங்கும் போது வாயுவை அணைக்கவும்.

எலுமிச்சை சாறு வைத்துச் செய்யும் முறை 

lemon for fennal inside

இதேபோல் மீதமுள்ள சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் மற்றும் எலுமிச்சை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். பின்னர் ஒரு கெட்டியான சிரப் வந்ததும் மீதமுள்ள பெருஞ்சீரகம் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

இரண்டு விதமான இனிப்பு பெருஞ்சீரகம் தயாராக உள்ளது. இப்போது அதை மூடிய காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் வைக்கவும்.

இனிப்பு பெருஞ்சீரகம்

sugar coated fennel  inside

இந்த இனிப்பு கருஞ்சீரகத்தை நீங்கள் வாய் ப்ரெஷ்னராகவும் பயன்படுத்தலாம். இது மிகவும் எளிதானது நீங்கள் எந்த நேரத்திலும் வீட்டில் இனிப்பு பெருஞ்சீரகம் செய்யலாம்.

பொருள்

  • 2 டீஸ்பூன் சர்க்கரை
  • 2 டீஸ்பூன் தண்ணீர் அல்லது தேவைக்கேற்ப தண்ணீரை எடுத்துக்கொள்ளலாம்
  • 2-3 டீஸ்பூன் பெருஞ்சீரகம்

செய்முறை

  • வீட்டில் இனிப்பு பெருஞ்சீரகம் செய்யும் முறை முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
  • கலவை சிரப் ஆகும் வரை சர்க்கரை கலவையை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • சிரப்பில் நிறைய குமிழ்கள் எழ ஆரம்பிக்கும் போது அதை சுமார் 2-3 நிமிடங்கள் சமைக்க வேண்டும்.
  • பிறகு தீயை குறைத்து அதனுடன் பெருஞ்சீரகம் சேர்க்கவும். கலவை கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறவும்.
  • பெருஞ்சீரகம் கிட்டத்தட்டக் காய்ந்தவுடன் அதை விரைவாக வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றவும். பின்னர் பெருஞ்சீரகம் விதைகள் பிரியும் வரை மேலும் சில நொடிகள் கிளறிக்கொண்டே இருக்கவும்.

உங்கள் இனிப்பு பெருஞ்சீரகம் தயாராக உள்ளது, இப்போது அதை மூடிய காற்று புகாத கண்ணாடி பாட்டில் வைக்கவும்.

 மேலும் படிக்க:  ஆரோக்கியமான வாழ்விற்கு அனைத்து வயதினரும் செய்யக்கூடிய யோகா ஆசனம்

 

எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம், குழந்தைகளுக்கும் ஊட்டலாம். இது தவிர சாலடுகள், இனிப்பு வகைகள், கஞ்சி போன்றவற்றிலும் தூவி சாப்பிடலாம். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

 

Image Credit: Freepik & Google

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com