Ginger Honey Cough Drops in Tamil: வீட்டிலேயே இருமலுக்கான மிட்டாய் செய்வது எப்படி?

குளிர்கால இருமலில் இருந்து விடுபட வேண்டுமா? இந்த இஞ்சி தேன் மிட்டாயின் செய்முறையை படித்தறிந்து பலன் பெறுங்கள்.

honey ginger cough drop

குளிர்காலத்தில் சளி மற்றும் இருமல் தொந்தரவுகள் அடிக்கடி ஏற்படுவது இயல்பானது தான். இந்த சமயங்களில் நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயற்கை மூலிகைகளால் ஆன கஷாயம் போன்ற பானங்களை குடிக்கலாம். தொண்டை கரகரப்பு, தொண்டை வலி இருக்கும் சமயங்களில் இதை குடித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும். இந்த பருவ காலத்தில் பலரும் விக்ஸ் போன்ற மிட்டாய்கள் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இஞ்சி, எலுமிச்சை, தேன் போன்ற பொருட்கள் இருமலில் இருந்து சிறந்த நிவாரணம் அளிக்கின்றன. இவை இருமலில் இருந்து நீவாரணம் பெற எவ்வாறு உதவுகின்றன என்பதையும், இவற்றைக் கொண்டு எவ்வாறு மிட்டாய் செய்யலாம் என்பதையும் இப்பதிவில் பார்க்கலாம்.

இருமலுக்கு இஞ்சி எவ்வாறு உதவுகிறது?

cough

இருமல், சளி மற்றும் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் பெற இஞ்சி ஒரு சிறந்த மருந்தாகும். குமட்டல் முதல் ஜலதோஷம், காய்ச்சல், தொண்டை புண் வரை பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபட இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. இஞ்சி அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதில் செயல்நிலையில் உள்ள ஜிஞ்சரால் எனும் கலவை தொண்டைக்கு இதமளிக்கிறது. மேலும் இது உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்ற உதவுகிறது.

இருமலுக்கு தேன் எவ்வாறு உதவுகிறது?

cough

சளி மற்றும் இருமலிலிருந்து நிவாரணம் பெற சுத்தமான தேனை பயன்படுத்தலாம். ஏனெனில் இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்து இருக்கும். தேன் மூச்சு குழாயின் வீக்கத்தை குறைப்பதோடு மட்டுமின்றி, நெஞ்சு சளியில் இருந்தும் நிவாரணம் பெறவும் உதவுகிறது. இதனால் சுவாசிப்பது எளிதாக இருக்கும்.

இருமலுக்கு எலுமிச்சை எவ்வாறு உதவுகிறது?

இஞ்சி, தேன் மற்றும் எலுமிச்சை, இவை மூன்றும் இருமலுக்கு சிறந்தவை. இவை சளியை கரைத்து தொண்டை வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகின்றன. எலுமிச்சையில் நிறைந்துள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

இருமலுக்கு உகந்த இஞ்சி தேன் மிட்டாய் செய்வது எப்படி?

கடைகளில் விற்கப்படும் இருமல் மிட்டாய்களை வாங்குவதற்கு பதிலாக இனி வீட்டிலேயே ஃபிரஷ்ஷாக செய்து சாப்பிடலாம். இதன் செய்முறையை இப்போது விரிவாக பார்க்கலாம்

தேவையான பொருட்கள்

  • இஞ்சி - 1 துண்டு
  • எலுமிச்சை - 1(சாறு எடுக்கவும்)
  • தேன் - 1 டேபிள் ஸ்பூன்
  • சர்க்கரை - 1/2 கப்

செய்முறை

cough

  • முதலில் இஞ்சியை துருவி சாறு எடுத்து கொள்ளவும். எலுமிச்சை சாறையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு தட்டில் நெய் அல்லது எண்ணெய் தடவி தயாராக வைக்கவும்.
  • பின்பு ஒரு கடாயில் அரை கப் சர்க்கரை சேர்த்து சூடு படுத்தவும். தீ குறைவாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சர்க்கரை கரைந்த பின் அடுப்பை அணைக்கவும்.
  • உருகிய சர்க்கரையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் தேன், இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்திற்கு ஏற்ற 3 டீடாக்ஸ் டீ ரெசிபிக்கள்

  • இந்த கலவையை ஒரு ஸ்பூனில் எடுத்து சிறிது சிறிதாக நெய் தடவிய தட்டில் விடவும்.
  • இது செட் ஆன பிறகு தட்டில் இருந்து நீக்கி, காற்று புகாத ஒரு பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.
  • சுவையான இஞ்சி தேன் மிட்டாய் தயார். உங்களுக்கு இருமல் அல்லது தொண்டை வலி ஏற்படும் போது இது உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த எளிமையான செய்முறையை பின்பற்றி நீங்களும் இதை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: ஆரோக்கியத்தையும் அழகையும் அள்ளி தரும் நெல்லிக்காய் !

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP