herzindagi
women healthy food

Immunity foods for winter: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குளிர்கால உணவுகள்!

பருவ கால நோய்த் தொற்றிலிருந்து தப்பிக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தான் பேருதவியாக இருக்கும்.
Editorial
Updated:- 2024-01-20, 14:32 IST

குளிர்காலம் வந்தாலே நாம் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட வேண்டிய காலமாக இருக்கும். இந்நாள்களில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டின் காரணமாக காய்ச்சல், சளி, சுவாச கோளாறுகள் போன்றவை அதிகளவில் ஏற்படும். 

எனவே தான் குளிர்காலத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது வெள்ளை இரத்த அணுக்களை அதிகரித்து பருவ காலத்தில் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். இதோ ஹெல்த்தி உணவுகளின் லிஸட் இங்கே..

winter food items product

குளிர்கால உணவுகளின் லிஸ்ட்!

கருமிளகு:

  • கருப்பு தங்கம் என்றழைக்கப்படும் கருமிளகு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தன் வசம் வைத்துள்ளது. உணவுக்கு சுவையை ஒருபுறம் கொடுப்பதோடு மட்டுமன்றி மனித உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.
  • இதை நம்முடைய உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும்போது, உடலில் இரத்த அணுக்களை அதிகரித்து பல்வேறு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் செரிமானப் பிரச்சனைகளையும் சரி செய்கிறது. 

மேலும் படிக்க: மழைக்காலங்களில் உடல் சோர்வாகிறதா? காரணம் இது தான்! 

எலுமிச்சைப் புல்:

  • ஆன்டிஆக்ஸிடன்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளதால் லெமன் கிராஸ் எனப்படும் எலுமிச்சைப் புல்லில் அதிக மருத்துவக்குணங்களைக் கொண்டுள்ளது. 
  • குளிருக்கு இதமாக காலை மற்றும் மாலை வேளைகள் மட்டுமில்லாது அடிக்கடி டீ குடிப்போம்.  டீயுடன் லெமன் கிராசையும் கலந்துக் குடிக்கும் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இருமல் மற்றும் தொண்டைப் புண்களை சரிசெய்வதோடு பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது.

இஞ்சி மற்றும் பூண்டு: 

  • சைவ மற்றும் அசைவ உணவுகளுக்கு அதிக சுவையைக் கொடுப்பது இஞ்சி மற்றும் பூண்டு தான். இதோடு இவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள்  மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 
  • இதில் உள்ள ஆன்டிவைரல் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது.

சிட்ரஸ் பழங்கள்:

  • பழங்களை தினமும் சாப்பிடுவது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதிலும் குளிர்காலத்தில் வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்ச், எலுமிச்சை,திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை உட்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
  • இதில் உள்ள நார்ச்சத்துக்கள், ஆக்ஸினேற்றிகள். தாதுக்கள் மற்றும் என்சைம்கள் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
  • குளிர்காலத்தில் ஏற்படும் செரிமானப் பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

மேலும் படிக்க:குளிர்காலத்தில் கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் ! 

மீன் மற்றும் கோழி:

  • குளிர்காலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்கேற்ற ஆற்றல் நமக்கு தேவை. எனவே வாரத்திற்கு ஒருமுறையாவது மீன் அல்லது நாட்டுக்கோழிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 
  • இதில் உள்ள வைட்டமின் பி, துத்தநாகம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவியாக உள்ளது.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com