
பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியது அத்தி பழம். இதை அத்தி பழமாகவும் எடுத்து கொள்ளலாம் அல்லது காய்ந்த பின்பு நட்ஸாகவும் சாப்பிடலாம். அத்தி பழத்தில் தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. சிறந்த செரிமானத்திற்கும் உதவுகிறது. பசியை கட்டுப்படுத்துதல் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இது சிறந்தது. உணவுக்குப் பிறகு உடலால் உறிஞ்சப்படும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் அத்தி பழம் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் மற்றொரு முக்கியமான குளோரோஜெனிக் அமிலம் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவலையின்றி அத்தி பழத்தை சாப்பிடலாம்.
அத்தி பழத்தில் மிதமான கிளைசெமிக் இன்டெக்ஸ் (ஜிஐ) 61 உள்ளது. இது மற்ற உயர் ஜிஐ உணவுகளை விட மெதுவாக இரத்தத்தில் குளுக்கோஸை வெளியிடுகிறது. இதில் உள்ள அதிக நார்ச்சத்து உணவு மெதுவாக செரிக்கப்படுவதை உறுதிசெய்து, நீண்ட நேரம் வயிறை முழுமையாக வைத்திருந்து, பசி எடுக்காமல் பார்த்து கொள்கிறது. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் தாரளமாக அத்தி பழத்தை தங்களது டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.

அத்திப்பழத்தில் உள்ள இரத்தச் சர்க்கரை அமிலங்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, நீரழிவு நோயாளிகள் அத்தி பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
2-3 காய்ந்த அத்தி பழங்களை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் சாப்பிடுங்கள்.
ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக பெற அதிகாலையில், எழுந்தவுடன் உட்கொண்டால் மிகவும் நல்லது. இது மற்ற புரதங்களுடன் பகலில் சாப்பிடலாம், இரவில் படுக்கைக்கு முன் சூடான பாலுடன் சாப்பிடுவது நல்லது.
இரத்தத்தில் எல்டிஎல் அளவைக் குறைத்தல், ஹெபடோப்ரோடெக்டிவ் (கல்லீரலைச் சுத்தப்படுத்துதல்), நீரிழிவு எதிர்ப்பு (இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துதல்), ஆண்டிபிரைடிக் (காய்ச்சலைக் குறைத்தல்), ஆன்டிஸ்பாஸ்மோடிக் (தசை பிடிப்புகளைக் குறைக்க உதவுதல்) ஆகியவற்றுக்கு அத்தி பழம் மிகவும் உதவுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com