
இன்றைய உணவுப்பழக்க வழக்கம், முறையற்ற தூக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் உடலின் நோய் எதிர்ப்பு குறைவதோடு பல்வேறு உடல் நல பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று நினைத்தால் நாவல் பழங்களை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். ஆம் இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல வகைகளில் நன்மை அளிக்கிறது. இதோ என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: Benefits of Carrot: குளிர்காலத்தின் போது கேரட் சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?
நோய் எதிர்ப்பு சக்தி: வைட்டமின் சி அதிகம் உள்ள நாவல் பழங்களை அதிகளவில் சாப்பிடும் போது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (ஆக்ஸிஜனேற்றிகள்) மற்றும் வைட்டமின் C, வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை ஊக்குவித்து, நோய்களை எதிர்க்கும் திறனை மேம்படுத்துகின்றன.
நுண்ணுயிர் எதிர்ப்பு: நாவல் பழங்களில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. எவ்வித நோய் தொற்று பாதிப்புகள் எதுவாக இருந்தாலும் நாவல் பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இந்த பாதிப்புகளையெல்லாம் குறைக்க உதவுகிறது. இதோடு மட்டுமின்றி நாவல் பழ மரத்தின் இலைகளிலும் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, பாஸ்பரஸ், சுண்ணாம்பு சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலுக்கு பல வகைகளில் நன்மை பயக்குகிறது. இலைகளைப் போன்று இந்த பட்டைகளிலும் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. எனவே இந்த பட்டையை தேநீராக செய்து வாய் கொப்பளித்து வரும் போது வாய்ப்புண் பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.
மேலும் படிக்க: வாய் துர்நாற்றத்தால் யாரிடம் பேச முடியவில்லையா? தவிர்க்கும் எளிய வழிமுறைகள் இங்கே!
இதுபோன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் ஆக்சலேட் இருப்பதால் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. அதே சமயம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. மதியம் மற்றும் மாலை வேளைகளில் மட்டும் சாப்பிடுவது நல்லது.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com