Boiled Egg Benefits: வேகவைத்த முட்டையை சாப்பிடுகிறீர்களா... அப்போ இதை தெரிஞ்சுக்காமா சாப்பிடாதீர்கள்!!

முட்டை சாப்பிடுவது எப்படி உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதை இன்று நாங்கள் உங்களுக்கு கூற  உள்ளோம்.

boiled egg card

முட்டையில் நிறைய சத்தான கூறுகள் உள்ளதால் அவை முழு உடலுக்கும் நன்மை பயக்கும். குளிர்காலத்தில் முட்டை சாப்பிடுவது உடலில் வெப்பத்தை தக்க வைக்கிறது. முட்டையில் கலோரிகள் குறைவாகவும், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகமாகவும் உள்ளது. இருப்பினும், முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு எவ்வாறு பயனளிக்கின்றன என்பதை பார்க்கலாம்.

முட்டைகளை வேகவைக்க சரியான வழி

boiled egg benefits

முட்டைகளை வேகவைப்பது எளிதான காரியமாகத் தெரிகிறதா?. இருப்பினும் மிகச் சிலருக்கே முட்டைகளை சரியாக வெப்பநிலையில் வேகவைக்கத் தெரிந்துள்ளது. பலர் முட்டைகளை விரைவாக கொதிக்க வைப்பதற்காக அதிக தீயில் வைக்கிறார்கள் ஆனால் அவ்வாறு செய்வது தவறு. அவை அதிக வெப்பநிலையில் சமைக்கப்படக்கூடாது. அதிக வெப்பநிலையில் சமைப்பதன் மூலம் முட்டையில் உள்ள புரதத்தைப் பெறுவீர்கள் ஆனால் பல ஊட்டச்சத்துக்கள் அழிக்கப்படுகின்றன. அதிக வெப்பநிலையில் முட்டைகளை சமைப்பதால் அவற்றில் உள்ள வைட்டமின் ஏ 17% முதல் 20% வரை குறைகிறது என்று ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளது. அதிக வெப்பத்தில் முட்டையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களும் குறையும். எனவே, முட்டையை நீண்ட நேரம் அல்லது அதிக தீயில் வைத்து சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை செய்வதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும்.

முட்டையை சத்தானதாக மாற்றுவது எப்படி

boiled egg benefits tamil
  • நீங்கள் முட்டையை விரும்பி சாப்பிடுபவர்களாக இருந்தால் எப்போதும் மிதமான நிலையில் வேகவைத்த அல்லது முட்டையை ஆம்லெட்டை செய்து சாப்பிடுங்கள். அவை குறைந்த கலோரிகள் மற்றும் அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கம் கொண்டவை.
  • முட்டையில் இன்னும் அதிக சத்தானதாக மாற்ற அதில் ஏதேனும் ஒரு டிஷ் செய்து அதில் அதிக காய்கறிகளைப் பயன்படுத்த வேண்டும்.
  • கூடுதலாக ஆலிவ் எண்ணெய், வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணெய்களில் சமைக்கவும்.
  • வெள்ளை முட்டைக்கு பதிலாக நாட்டு முட்டைகளை எப்போதும் சாப்பிடுங்கள். இவற்றை சாப்பிட்டால் ஒரு வேலைக்கு 2 நாட்டு முட்டைகளுக்கு மேல் சாப்பிட வேண்டாம்.

இந்த பதிவும் உதவலாம்: சுரைக்காய் சாற்றின் முழு பலன்களை பெற இப்படி அருந்த வேண்டும்!!

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP