உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க பல வகையான பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மற்றும் விதைகளை சேர்த்துக் கொள்ளும்படி நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். உடல் எடை குறைக்க சரியான நேரத்தில் சரியான உணவுகளை சாப்பிட வேண்டும். நட்ஸ் மற்றும் விதைகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
அக்ரூட் போன்ற பருப்புகளை சாப்பிடுவதால் எடை கூடும் என்று பலரும் அச்சப்படுகிறார்கள். ஆனால் அக்ரூட் பருப்பில் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. இதை சரியான முறையில் சாப்பிட்டால், இது உங்களுடைய எடை இழப்புக்கு நிச்சயம் உதவும். அக்ரூட் பருப்புகளை சரியான முறையில் எடுத்துக் கொள்வதால் கிடைக்கக்கூடிய பலன்களை ஊட்டச்சத்து நிபுணரான ராதிகா கோயல் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: பாதங்களுக்கு ஆயில் மசாஜ், இனி கஷ்டப்படாம ஈஸியா எடையை குறைக்கலாம்!
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அக்ரூட் பருப்புகளை எடுத்துக் கொள்ளலாம் என நிபுணர் குறிப்பிட்டுள்ளார். இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் உடல் எடையை குறைக்க உதவும். மேலும் இதில் காணப்படும் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகின்றன. இதை சரியான முறையில் எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் உடல் பருமனை தடுக்கலாம்.
அக்ரூட் பருப்புகளில் காணப்படும் ஃபைட்டிக் அமிலம் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை குறைக்கிறது. இதை தடுக்க அக்ரூட் பருப்புகளை எப்போதும் ஊற வைத்தே சாப்பிட வேண்டும். இதனை இரவு முழுவதும் ஊறவைத்த பின் காலையில் எழுந்தவுடன் சாப்பிடுங்கள். இவ்வாறு ஊற வைப்பதால் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் சிறப்பாக இருக்கும். பலவீனமான செரிமான திறன் உள்ளவர்களும் இதை எளிதாக சாப்பிடலாம். ஊறவைத்த அக்ரூட் பருப்புகள் உடலின் வெப்பத்தை குறைத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது, அன்றைய நாள் முழுவதும் ஆற்றலுடன் சுறுசுறுப்பாக செயல்படலாம். மேலும் இது இதில் உள்ள தாதுக்கள் நல்ல தூக்கத்தையும் பெற உதவுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: நிகரற்ற நன்மைகளை அள்ளித் தரும் வாழைப்பூ!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com