உடல் எடையை குறைக்க பலரும் பல கடுமையான முயற்சிகளை செய்து வருகின்றனர். விரும்பிய உணவை சாப்பிடாமல், பல மணி நேரம் உடற்பயிற்சி செய்தும் எடை குறையவில்லையா? அடுத்து என்ன செய்வதென்று குழப்பமே வேண்டாம், இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள எளிய குறிப்பை முயற்சி செய்து பாருங்கள்!
இனி உடலுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை உங்கள் கால்களுக்கும் கொடுங்கள். உங்கள் எடை சுமையை சுமக்கும் உங்கள் பாதங்களுக்கு சிறப்பு கவனம் கொடுங்கள். இன்று பலரும் ஓய்வின்றி கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு இடையில் வெறும் 5 நிமிடங்களை மட்டும் நீங்கள் ஒதுக்கினால் போதும் உங்களுடைய பல உடல் நல பிரச்சனைகளுக்கு சுலபமாக தீர்வு காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களே, நோய்கள் அண்டாமல் இருக்க தினமும் யோகா செய்யுங்கள்!
பாதங்களில் பலவிதமான அழுத்த புள்ளிகள் உள்ளன. தினமும் ஐந்து நிமிடங்கள் கடுகு எண்ணெயை கொண்டு உங்கள் பாதங்களை மசாஜ் செய்யுங்கள். இதை செய்து வந்தால் பின்வரும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு பழக்க வழக்கங்களால் உடல் எடை அதிகரிக்கலாம். உடல் எடையை சரியான வரம்புக்குள் வைத்திருந்தால் பல உடல்நல பிரச்சனைகளை தவிர்க்க முடியும். அதிகப்படியான உடல் எடையை குறைக்க இரவு தூங்க செல்வதற்கு முன் உங்கள் பாதங்களுக்கு 5 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்வதற்கு கடுகு எண்ணெயை பயன்படுத்தவும்.
உண்மையை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும், இன்று நம்மில் பலரும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை வாழ்கிறோம். இதனால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பல எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படலாம். உங்கள் மனதை அமைதி படுத்தவும் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் கடுகு எண்ணெயை கொண்டு உங்கள் பாதங்களுக்கு மசாஜ் செய்யலாம்.
உடல் எடையை பராமரிக்கவும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும் நல்ல தூக்கம் அவசியமாகிறது. முறையற்ற தூக்க சுழற்சியால் உடல் நலம் நிச்சயம் பாதிக்கப்படும். இதுபோன்ற நிலைகளை தடுக்க இரவு தூங்க செல்வதற்கு முன் கடுகு எண்ணெயை கொண்டு உங்கள் பாதங்களை மசாஜ் செய்யலாம். இது நல்ல தூக்கத்தை பெற உதவும்.
கடுகு எண்ணெயில் ஏராளமான வைட்டமின்களும், தாதுக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இந்த எண்ணெயை கொண்டு உங்கள் பாதங்களுக்கு தினமும் மசாஜ் செய்து வந்தால் நல்ல விளைவுகளை விரைவில் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் ஆயுர்வேத வைத்தியம்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com