தண்ணீர் உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. தண்ணீரின் நன்மைகள் பற்றி நீங்கள் நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த அளவுகள் குறித்து நிறைய பொய்யான தகவல்களும் பரவி வருகிறது. இது போன்ற நம்பகமற்ற தகவல்களால் குழம்பி இருக்கிறீர்களா?
அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதும் ஆபத்தானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சரியான அளவுகள் குறித்த நம்பகமான தகவல்களை மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்வதே சிறந்தது. இது குறித்த தகவல்களை ஆயுர்வேத மருத்துவர் தீக்ஷா பவ்சர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஆயுர்வேத குறிப்புகள்
குடிநீர் பற்றி அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் பற்றி விளக்குகிறார் மருத்துவர் தீக்ஷா பவ்ச்சர் அவர்கள். அவரிடம் கேட்கப்பட்ட பொதுவான கேள்விகளை இப்போது பார்க்கலாம்
மருத்துவர் தீக்ஷா பவுச்சர் அவர்களின் கருத்துப்படி தண்ணீர் அனைவருக்கும் ஆரோக்கியமானது. அனைத்து உறுப்புகளுக்கும் தண்ணீர் அவசியமானது, இருப்பினும் அதை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என தெளிவுபடுத்துகிறார்.
தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் வீக்கம் பாலி யூரியா, ஹைபோநெட்ரீமியா, மோசமான வளர்சிதை மாற்றம் போன்ற பிரச்சனைகளை ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: வைட்டமின் D குறைபாட்டை போக்கும் அற்புத பானங்கள்
இதற்கான பதில் மிகவும் எளிதானது, ஒருவருக்கு தேவையான தண்ணீரின் அளவை நிர்ணயிப்பது கடினம். ஏனெனில் இது பருவ நிலைக்கு ஏற்றவாறு மாறுபடலாம். இதனுடன் மன அழுத்தம், உடல் செயல்பாடுகள் போன்ற காரணத்தினாலும் தண்ணீர் குடிக்கும் அளவுகள் மாறுபடலாம். எனவே தண்ணீரை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ குடிக்க திட்டமிட வேண்டாம்.
உங்கள் உடலுக்கு தேவைப்படும் தண்ணீரின் அளவை சிறுநீர் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இது உங்களுக்கு விசித்திரமாக தோன்றினாலும் இந்த முறை மிகவும் சரியானது. உங்கள் சிறுநீர் மஞ்சள் நிறத்துடன் துர்நாற்றம் நிறைந்ததாக இருந்தால் உங்களுக்கு கூடுதல் தண்ணீர் தேவைப்படுகிறது என்று அர்த்தம். எவ்வித மணம் மற்றும் நிறம் இல்லாமல் சிறுநீர் வெளியேற போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உங்கள் சிறுநீரை வைத்து உங்கள் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை நிர்ணயிப்பதே சிறந்தது. இதை தவிர்த்து உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை கிளாஸ் மூலம் கணக்கிடுவது சரியல்ல.
உடலில் அதிகப்படியான நீர் அல்லது நீர் பற்றாக்குறை இருப்பதாக உணர்ந்தால் மருத்துவரை ஆலோசனை செய்யவும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com