Vitamin D Deficiency : வைட்டமின் D குறைபாட்டை போக்கும் அற்புத பானங்கள்

பல நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள வைட்டமின் D எனும் ஊட்டச்சத்து அவசியமானது. வைட்டமின் D குறைபாட்டை போக்க உதவும் பானங்கள் பின்வருமாறு...

vitamin d deficiency curing drinks

இன்றைய நவீன காலகட்டத்தில் பலரும் வைட்டமின் D குறைபாட்டால் அவதிப்படுகிறார்கள். ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக இது போன்ற நிலை ஏற்படலாம். இந்தக் குறைபாட்டை போக்க வைட்டமின் D நிறைந்த உணவு முறையை பின்பற்ற வேண்டும். வைட்டமின் D குறைபாட்டை போக்க பின்வரும் ஐந்து பானங்கள் உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.

மாட்டுப்பால்

மாட்டுப்பால் வைட்டமின் D இன் சிறந்த ஆதாரம் ஆகும். இதனுடன் எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியம் சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன. தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த மாட்டுப் பாலை குடிக்கலாம். உங்களுக்கு பால் குடிக்க விருப்பம் இல்லையெனில் இதனைக் கொண்டு ஸ்மூத்தி அல்லது மில்க் ஷேக் தயார் செய்து குடிக்கலாம்.

ஆரஞ்சு ஜூஸ்

orange juice for vitamin d deficiency

ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் D உடன் ஏராளமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபிரஷ்ஷான ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம் அல்லது ஆரஞ்சு பழங்களை சாப்பிடலாம். இது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முறையான செயல்பாட்டிற்கும், ஆரோக்கியமான சருமத்திற்கும் உதவவியாக இருக்கும்.

சோயா பால்

soya milk for vitamin d deficiency

சைவ உணவு சாப்பிடுபவர்கள் தங்கள் வைட்டமின் D தேவையை பூர்த்தி செய்ய சோயா பால் குடிக்கலாம். சோயா பால் மற்றும் மற்ற தாவர அடிப்படையிலான பால் வகைகளில் வைட்டமின் D மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும். மாட்டுப் பாலுக்கு இணையான ஊட்டச்சத்துக்கள் இதுபோன்ற பால்களிலும் இருக்கும்.

மோர்

மோர் தயிர் போன்ற பால் சார்ந்த பொருட்களில் வைட்டமின் D நிறைந்திருக்கும். இது உடலின் சூட்டை தணித்து கோடை காலத்தில் ஏற்படும் பல உடல் நல பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது. மோர் அல்லது தயிரை எடுத்துக் கொள்வதன் மூலம் வைட்டமின் D குறைபாட்டை போக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இரவு தூங்குவதற்கு முன் ஒரு கைப்பிடி அளவு பிஸ்தா சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகளா!

கேரட் ஜூஸ்

carrot juice for vitamin d deficiency

கேரட் ஜூஸ் உடலுக்கு ஆற்றலை தருவதுடன் வைட்டமின் D குறைபாட்டையும் போக்க உதவுகிறது. இதில் நிறைந்துள்ள வைட்டமின் D உங்கள் கண் பார்வையை மேம்படுத்தும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP