இன்றைய பெண்களுக்கு குண்டாக இருப்பது தான் பெரும் மன உளைச்சலாக உள்ளது. வீட்டு வேலை, அலுவலக வேலை அனைத்திலும் பிஸியாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்வதில்லை. சில நேரங்களில் ஜிம்மிற்கு சென்றோ? அல்லது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைக்கலாம் என முயற்சி செய்தாலும் அவர்களால் அதை கடைபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையை நீங்களும் அனுபவித்து உள்ளீர்களா? அப்படின்னா உங்களது எடையைக் குறைக்க மற்ற உடற்பயிற்சிகளை விட்டு விட்டு நடனத்தில் உங்களது கவனத்தை செலுத்துங்கள். பொழுதுப்போக்கு விஷயங்களில் ஒன்றாக உள்ளதால், நீண்ட காலத்திற்கு இந்த பயிற்சிகளை உங்களால் செய்ய முடியும். சமீபத்திய ஆய்வில் கூட அதிக எடை மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு பல்வேறு வகையான நடனத்தின் மூலம் ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆம் வாழ்க்கையில் தொடர்ந்து நடன பயிற்சியை மேற்கொள்பவர்களை மற்றவர்களுடன் ஒப்பிடும் போது , இடுப்பு சுற்றளவு, உடல் கொழுப்பின் சதவீதம் கணிசமாக குறைகிறது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் படிங்க: மார்பக புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள்
இது போன்ற நடனப் பயிற்சிகள் உடல் எடையைக் குறைப்பதற்கு மட்டுமின்றி, மேம்படுத்தப்பட்ட இரத்த ஓட்டம், ஒரு வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பு,சிறந்த தூக்கம், மள அழுத்தம் குறைவு, நீரிழிவு மற்றும் இதய நோய் சம்பந்தப்பட்ட பல உடல் நல பிரச்சனைகளையும் குறைக்க உதவியாக உள்ளது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com