குளிர்காலம் தொடங்கியதும் நாம் அனைவரும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட தொடங்குகிறோம். குறிப்பாக இந்த பருவகாலத்தில் சிறு குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்து அவர்களை முறையாகக் கவனித்து கொள்ள வேண்டும். இதை செய்ய தவறினால் அவர்களுக்கு இருமல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
எனவே, குளிர்காலத்தில் சிறு குழந்தைகளை முறையாகக் கவனித்து கொள்வதற்கான வழிமுறைகளை இந்த பதிவில் விளக்குகிறோம். முழுமையாகப் படித்துப் பயனடையுங்கள்.
குளிர்காலத்தில் குழந்தைகளின் ஆடைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த சமயத்தில் பெரும்பாலான குழந்தைகள் சிறிது நேரம் ஓடி, ஆடி விளையாடிய உடனே புழுக்கமாக இருப்பதாகக் கூறி உடலுக்கு சூடு தரும் ஜர்க்கினை கழற்றி விடுகின்றனர். எனவே இதுப் போன்ற சமயத்தில் ஸ்வெட்டர், உல்லன் ஆடைகளை ஜர்க்கினுக்கு உள்ளே போட்டு விடவும். இதனால் குளிர்ச்சியான காற்று அவர்களின் உடலைத் தாக்காது.
குழந்தைகளின் பாதங்கள் மற்றும் காதுகளில் குளிர்ந்த காற்று பட்டால் சளி பிடிக்கலாம். எனவே குழந்தைகளுக்கு எப்போதுமே காலில் சாக்ஸ் மற்றும் தலையில் குல்லாய் போட்டு வைக்கவும். குழந்தைகள் தரையில் விளையாடும் போது காலணிகள் அணிவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: பிள்ளைகளின் வயிற்றில் உள்ள குடற்புழுக்களை அகற்ற எளிய வழிகள்!!!
குளிர்ச்சியான தரையில் அமர்ந்து குழந்தைகள் விளையாடக் கூடாது. ஏனெனில் குளிர்காலத்தில் தரை குளிர்ச்சியாக இருக்கலாம். இதனால் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே குளிர்காலத்தில் தரையில் கம்பளங்களை விரித்து வைப்பது பாதுகாப்பாக இருக்கும்.
குளிர்காலத்தில் குழந்தைகளுக்குக் குளிர்ச்சியான உணவுகள் கொடுக்கக் கூடாது. குழந்தைகளுக்கு எப்போது உணவளித்தாலும் அதை சூடாகக் கொடுக்க முயற்சி செய்யுங்கள். உணவுடன் வெதுவெதுப்பான பால் கொடுப்பதும் நல்லது.
பல நேரங்களில் குழந்தைகள் குளிர்கால ஆடைகளை அணிவதில் அசௌகரியமாக உணர்கிறார்கள். உங்கள் குழந்தைகளும் இதே போல் குளிர்கால ஆடைகள் அணிய அடம் பிடித்தால் சாஃப்ட்டாக இருக்கும் அதே நேரம் துவைத்து காய வைக்க எளிமையாக இருக்கும் மிருதுவான ஆடைகளை அவர்களுக்குப் போட்டு விடவும்.
இந்த வழிமுறைகளை முறையாக பின்பற்றினால் உங்கள் குழந்தைகளை சளி மற்றும் இருமல் பிரச்சனையிலிருந்து எளிமையாக பாதுகாக்கலாம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com