herzindagi
get rid off worms from the child stomach

பிள்ளைகளின் வயிற்றில் உள்ள குடற்புழுக்களை அகற்ற எளிய வழிகள்!!!

உங்கள் பிள்ளைகளின் வயிற்றில் குடற்புழுக்கள் இருக்கிறதா? இந்த வீட்டு வைத்தியம் நிச்சயம் உங்களுக்கு பலனளிக்கும்.
Updated:- 2022-12-09, 09:00 IST

குடற்புழு பிரச்சனையில் அலட்சியம் வேண்டாம். வளரும் காலகட்டத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வயிற்றில் குடற்புழுக்கள் இருப்பது, குழந்தைகளைப் பாதிக்கும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சினையாகும். இது பெரும்பாலும் அசுத்தமான சூழல், சுகாதாரமின்மை, அழுக்குத் தண்ணீர் குடிப்பது மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. இது குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த சூழலில், குடற்புழுக்களை அகற்ற குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க வேண்டும்.

குடற்புழுக்களை அகற்ற மருந்துகளும் கிடைக்கின்றன. மருத்துவரை ஆலோசித்தபின் இந்த மருந்துகளை உங்கள் குழந்தைக்குக் கொடுக்கலாம். இந்த மருந்துகளை 6 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே கொடுக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவை குறுகிய கால விளைவுகளை மட்டும் ஏற்படுத்தும். இந்த காரணத்தில், பெரும்பாலான பெற்றோர்கள் இதற்கான வீட்டு வைத்தியத்தைத் தேடுகிறார்கள். சமையலறையில் இருக்கும் ஒரு சில பொருட்களைப் பயன்படுத்தி குடற்புழுக்களை அகற்றலாம். இதற்கான சுலபமான வழிகளை இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

இந்த குறிப்புகள் பற்றிய தகவலை ஆயுர்வேத நிபுணர் டாக்டர் தீக்ஷா பவ்சர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துள்ளார். இவர் உடல்நலம் தொடர்பான குறிப்புகளை தனது ரசிகர்களுடன் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். குடற்புழுக்களுக்கான வீட்டு வைத்தியங்களை பார்ப்பதற்கு முன், இதன் பொதுவான அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

குழந்தைகளின் வயிற்றில் குடற்புழு இருப்பதற்கான பொதுவான அறிகுறிகள்

  • எரிச்சல்
  • வயிற்று வலி
  • ஆசன வாயில் அரிப்பு
  • வயிற்றுப்போக்கு
  • காய்ச்சல்
  • வறட்டு இருமல்
  • சோர்வு
  • பல் கடித்தல்
  • இரத்த சோகை
  • எடை இழப்பு
  • அடிக்கடி சாப்பிடுவது போன்றவை

இந்த சமையலறை பொருட்கள் (கருப்பு மிளகு, பெருங்காயம், துளசி, இஞ்சி, மஞ்சள்) குழந்தைகளின் வயிற்றில் உள்ள குடற்புழுக்களை அகற்ற சிறந்தவை, ஏனெனில் இவற்றில் நெடி தன்மை, ஒட்டுண்ணி எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன.

1. கருப்பு மிளகு

black pepper to remove worms

கருப்பு மிளகு குடற்புழுக்களை வெளியேற்றி, செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது.

செய்முறை

இரவு தூங்க செல்வதற்கு முன் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு தூளுடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து கொடுக்கவும்.

2. பெருங்காயம்

பெருங்காயத்தில் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இது வாய்வு, உப்புசம், மலக்குடல் எரிச்சல் நோய்(IBS), வயிற்றுப்பொருமல், குடற்புழுக்கள் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்சினைகளுக்கு ஒரு பழமையான மருந்தாகும்.

செய்முறை

காய்கறிகள் அல்லது பருப்பு வகைகள் சமைக்கும் போது, அதில் அரை சிட்டிகை பெருங்காயம் சேர்க்கலாம்.

3. துளசி

tulsi to remove worms

துளசி வைட்டமின் C, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இதில் உள்ள பல தனிமங்கள் குடற்புழுக்களை அகற்ற உதவுகின்றன.

செய்முறை

துளசி சாறு (3-5 துளசி இலைகளிலிருந்து தயாரிக்கப்பட்டது), அரை டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை சுக்கு பொடியைக் கலந்து காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கவும்.

4. இஞ்சி

இஞ்சி பெரும்பாலும், வீட்டில் எப்போதும் இருக்கும். இது வயிற்றில் அமில உற்பத்தியை மேம்படுத்தும் திறன் கொண்டது. இது கெட்ட பாக்டீரியா மற்றும் புழுக்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

செய்முறை

இஞ்சியை தண்ணீர், தேநீர் அல்லது காய்கறிகளுடன் சேர்க்கலாம்.

5. மஞ்சள்

turmeric to remove worms

குழந்தைகளின் வயிற்றுல் உள்ள குடற்புழுவை அகற்ற மஞ்சள் ஒரு அற்புதமான வீட்டு வைத்தியம். இதில் உள்ள ஆன்டெல்மிண்டிக் பண்புகள், பூச்சிகள் மற்றும் அவை இடும் முட்டைகளை அழிக்க உதவுகின்றன.

செய்முறை

ஒரு சிட்டிகை மஞ்சள், ஒரு சிட்டிகை கருப்பு மிளகு தூள் மற்றும் அரை டீஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து தூங்குவதற்கு முன் கொடுக்கவும்.

மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம் - 3 துளசி இலைகள் (சாறு), 1 சிட்டிகை பெருங்காயம், இஞ்சி சாறு(அரை தேக்கரண்டி), மஞ்சள் மற்றும் கருப்பு மிளகை சேர்த்து வெறும் வயிற்றில் (உணவுக்கு 1 மணி நேரத்திற்கு) கொடுக்கவும் .

குடற்புழுக்கள் வராமல் இருக்க வாரம் ஒருமுறை இவற்றை சாப்பிடலாம். தினமும் காலையில், 15 நாட்களுக்கு இந்த கலவையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடற்புழுக்கள் நீங்கும்.

வீட்டு வைத்தியம் பயன் அளிக்கவில்லையெனில் , குடற்புழுக்களை அகற்ற சிறந்த ஆயுர்வேத மூலிகையான வாய்விளங்கத்தை (மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு) பயன்படுத்தலாம். இது சக்திவாய்ந்த ஒட்டுண்ணி எதிர்ப்பு பண்புகளுடைய ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்றாகும். இது குடல் புழுத் தாக்குதலுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது.

வாய்விளங்கம் சிரப், மாத்திரை அல்லது தூள் வடிவில் கிடைக்கிறது. இந்த மூலிகையை மருத்துவரை ஆலோசித்தபின், குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் வயிற்றில் இருக்கும் குடற்புழுக்களை வெளியேற்றிவிடலாம்.

குறிப்பு: இந்த வீட்டு வைத்தியங்களை 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குப் பின்பற்றலாம். குழந்தைக்கு வேறு ஏதேனும் உடல் நல பிரச்சனைகள் இருப்பின், மருத்துவரை ஆலோசித்தபின்னரே இதை கொடுக்க வேண்டும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்

Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com