Weight Lose Drinks: உடல் எடையை இயற்கையான முறையில் குறைக்க 3 எளிய பானங்கள்

கோடை காலத்தில் உடல் எடையை குறைப்பது எளிது. ஏனெனில் இந்த பருவ காலத்தில் கிடைக்கக்கூடிய சில பழங்கள் எடையை பெரிய அளவில் பராமரிக்க உதவுகிறது

natural drink image big

ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசையாகும். ஆனால் இப்போதெல்லாம் எடை சரியாக இருப்பவர்கள் மிகக் குறைவு. ஒவ்வொரு இரண்டாவது நபரும் எடை அதிகரிப்பதன் மூலம் தொந்தரவு அடைகிறார்கள் மற்றும் அதை குறைக்கும் வழிகளை தேடுகிறார்கள். அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் கோடை காலத்தில் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். கோடை காலத்தில் சில பழங்கள் கிடைக்கும் அதன் ஜூஸ் உங்கள் எடையை எளிதில் குறைக்க உதவும். இதைப் பற்றி உணவியல் நிபுணர் கௌரி ஆனந்தி கூறியிருப்பதை பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்கும் பானம்

தர்பூசணி ஜூஸ்

water melon juice inside new

உடல் எடையை குறைக்க தர்பூசணி சாறு குடிக்கலாம். இதில் அதிக நீர்ச்சத்து உள்ளதால் ஒரு சிறந்த நீரேற்றம் கொண்ட பழமாக இருக்கிறது. கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் இது மனநிறைவை அளிக்க உதவுகிறது. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளதால் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.

வெள்ளரி - இஞ்சி ஜூஸ்

வெள்ளரி மற்றும் இஞ்சி சாறு உடல் எடையை குறைக்க உதவுகிறது. வெள்ளரியில் அதிக நீர்ச்சத்து உள்ளதால் எடை இழப்புக்கு சிறந்தது. அதே நேரத்தில் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ள காரணத்தால் இது உங்களுக்கு மனநிறைவைத் தருகிறது. இஞ்சி ஜூஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் வீக்கத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.

விளாம்பழ ஜூஸ்

beal  juice inside

விளாம்பழ ஜூஸ் எடை இழப்புக்கு ஒரு சிறந்த வழி என்பதை நிரூபிக்கிறது. விளாம்பழ ஒரு இயற்கையான நீரேற்றும் பழமாகும் இது நாள் முழுவதும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்தும் உள்ளதால் உங்களுக்கு திருப்தி அளிக்கிறது. இது செரிமானத்திற்கும் உதவுகிறது. சரியான செரிமானம் வளர்சிதை மாற்றத்தை சரியாக வைத்து கொழுப்பை எரிக்க உதவுகிறது.

மேலும் படிக்க: உணவுமுறையில் இந்த மாற்றத்தை செய்தால் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்காலம்

இந்தக் கட்டுரையைப் பற்றிய உங்கள் கருத்தை கருத்துப் பெட்டியில் தெரிவிக்க வேண்டும். மேலும், இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மற்றும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க உங்கள் சொந்த வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருக்கவும்.

உங்களுக்கு ஏதேனும் உடல்நலம். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP