herzindagi
constipation home remedy

Home Remedy for Constipation : மலச்சிக்கல் நீங்கி வயிறு சுத்தமாக இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்!

மலச்சிக்கல் பிரச்சனையால் சிரமப்படுகிறீர்களா? நிபுணர் பரிந்துரை செய்துள்ள இந்த வீட்டு வைத்தியம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Editorial
Updated:- 2023-07-06, 20:09 IST

மலச்சிக்கல் அல்லது மலம் கழிப்பதில் சிரமமாக உணர்கிறீர்களா? மலச்சிக்கலை நீக்குவதற்கான ஒரு இயற்கை தீர்வை தேடுகிறீர்களா? மலச்சிக்கலால் வாயு, உப்புசம், வயிற்று வலி மற்றும் கடுமையான சந்தர பொங்கலில் மலத்தில் இரத்தம் கூட வரலாம். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட உதவும் ஒரு இயற்கை தீர்வை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். அதற்கு முன்னதாக மலச்சிக்கலின் அறிகுறிகளை தெரிந்து கொள்வோம்.

மலச்சிக்கலின் அறிகுறிகள்

இன்றைய நவீன வாழ்க்கை முறையால் பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் மலச்சிக்கலும் ஒன்று. இதன் அறிகுறிகள் பின்வருமாறு 

  • தலைவலி
  • பருக்கள் 
  • வாயு 
  • துர்நாற்றம்
  • பசியின்மை
  • மூலநோய்
  • எரிச்சல்
  • மந்தம்
  • ஆற்றல் பற்றாக்குறை
  • மனநிலை மாற்றம் 

 

இந்த பதிவும் உதவலாம்: இனி ஜோடியாக உடற்பயிற்சி செய்யலாம், இது தம்பதிகளுக்கான ஒர்க் அவுட்ஸ் ! 

 

மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? 

clean stomach constipation

ஆயுர்வேதத்தின்படி அஜீரணத்தால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இதனால் குடலில் மலம் குவிந்து, வயிற்று வலி, கனம், அதிகரித்த தாகம் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. பெரும்பாலும் ஒரு சில வாழ்க்கை முறையால் அஜீரண பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கர்ப்பம், வயது மற்றும் பயணம் போன்ற வேறு சில காரணங்களாலும் அஜீரணம் ஏற்படலாம்.

மலச்சிக்கலுக்கான வீட்டு வைத்தியம் 

இந்த வீட்டு வைத்தியத்தை ஆயுர்வேத நிபுணரான டாக்டர் செட்டாலி அவர்கள் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். நம் வீட்டு சமையலறையில் இருக்கக்கூடிய இரண்டு எளிய பொருட்களைக் கொண்டு மலச்சிக்கலுக்கு தீர்வு காணலாம் இதற்கான செய்முறையை இப்போது பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

milk ghee for constipation

  • பசும்பால் - 1 சிறிய கப் 
  • பசு நெய் - 1 டீஸ்பூன் 

செய்முறை 

  • ஒரு பாத்திரத்தில் பசும்பாலுடன் ஒரு டீஸ்பூன் பசு நெய் சேர்த்து சூடாக்கவும். 
  • இதனை இரவு தூங்குவதற்கு முன் அல்லது காலையிலும் எடுத்துக் கொள்ளலாம். 
  • பசு நெய் மற்றும் பால் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகின்றன. இவை பித்த மற்றும் வாத தோஷத்தை சமநிலைப்படுத்தி மலச்சிக்கலை போக்க உதவுகின்றன. 

எச்சரிக்கை 

இந்த வீட்டு வைத்தியம் எந்தவிதமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது. இருப்பினும் மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ் மற்றும் மலக்குடல் அழற்சி நோய் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கும் மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் மருத்துவரை ஆலோசனை செய்த பின் இந்த வீட்டு வைத்தியத்தை பின்பற்றலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: நீண்ட காலமாக தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் இருந்தால் என்ன ஆகும் தெரியுமா? 

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம். 

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com