கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த கொசுக்களால் பரவும் தொற்று மழைக்காலத்தில் மிகவும் பொதுவானது. டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளில் காய்ச்சல் போன்ற நோய், உடல்வலி மற்றும் சொறி போன்றவை அடங்கும். டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்ட ஏடிஸ் இனத்தின் கொசு கடிப்பதன் மூலம் டெங்கு மக்களுக்கு பரவுகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட கொசு நம்மை கடித்த பிறகு டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. வைரஸ் இரத்தத்தில் நுழைவதன் மூலம் ஒரு நபரை பாதிக்கிறது. சிக்குன்குனியா, மலேரியா, ஜிகா வைரஸ் மற்றும் பிற வைரஸ்கள் பரவுவதற்கு ஏடிஸ் வகை கொசுக்களும் காரணமாகின்றன. இந்தக் கட்டுரையின் மூலம், டெங்குவைத் தடுப்பதற்கான தீர்வுகளைப் பற்றி பார்க்கலாம், இது இந்த நோயிலிருந்து பயனுள்ள பாதுகாப்பை வழங்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: ஊட்டச்சத்துக்களின் புதையலான சிவப்பு திராட்சையில் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
டெங்கு தடுப்பு மற்றும் மீட்பு குறிப்புகள்
பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான மற்றும் மீட்பு குறிப்புகளை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். டெங்கு காய்ச்சலுக்கு மிகவும் பொதுவான காரணம் கொசுக்கள்தான், ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால்தான் டெங்கு காய்ச்சலுக்கு மக்கள் பலியாகின்றனர்.
காலையிலோ அல்லது உணவுக்கு இடையிலோ, 1 ஸ்பூன் குல்கண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலின் முதல் அறிகுறிகளான அமிலத்தன்மை, குமட்டல் மற்றும் பலவீனத்தை இது ஏற்படுத்தாது.
அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகையான சூப். டெங்கு காய்ச்சலுக்கும் இது ஒரு சிறந்த சிகிச்சையாகும். அதனுடன் கறுப்பு உப்பு அல்லது கல் உப்பு, சிறிதளவு பெருங்காயம் மற்றும் நெய் சேர்த்து சாப்பிட்டால், டெங்குவால் ஏற்படும் நீர்ச்சத்து குறைவதைத் தடுப்பதோடு, பசியின்மையும் அதிகரிக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
பத்த கோணாசனம் யோகா பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் கால் பாதங்கள் இரண்டயுன் ஒன்றிபைத்து பட்டாபூச்சி சிறகடிப்பது போல் கால்களை மேலும், இது முதுகுவலியில் இருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கும் மற்றும் நீங்கள் நிம்மதியாக உணர்வீர்கள். இது டெங்கு காய்ச்சலுக்கு நல்ல யோகா
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க மூலிகை பானம் உதவுகிறது. அதைச் செய்ய பால், தண்ணீர், மஞ்சள், குங்குமப்பூ, ஜாதிக்காய் ஆகியவை தேவைப்படும். ஒரு கிளாஸ் பால் மற்றும் ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் 2 முதல் 3 குங்குமப்பூவை சேர்க்கவும். இப்போது அதில் ஒரு சிட்டிகை ஜாதிக்காயை சேர்த்து பாதியாக குறையும் வரை கொதிக்க வைக்கவும். இதை சூடாகவோ அல்லது குளிர வைத்து எடுத்துக் கொள்ளலாம், மேலும் சுவைக்க வெல்லத்தை பயன்படுத்தலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் புரதச் சிதைவைத் தடுக்கிறது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இது சிறுநீரின் அளவை மீட்டெடுக்க உதவுகிறது. சிறுநீரின் நிறம் தெளிவாக இருப்பதை உறுதி செய்து போதுமான தண்ணீர் குடிக்கவும்.
இந்த பதிவும் உதவலாம்: இரும்புச்சத்து அதிகமாக இருந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தெரியுமா?
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit- Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com