காய்ச்சல் வந்தால் பலர் குளிக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். காய்ச்சல் வந்தால் குளித்தால் குளிரும் அல்லது உடல் வெப்பம் அதிகரிக்கும் என்று சிலர் கூறுவார்கள். இன்னும் சிலர் காய்ச்சல் வந்தால் குளிப்பதற்கு பதிலாக சூடு தண்ணீர் ஒத்தடம் கொடுத்தால் போதும் என்று கூறுவது வழக்கம். ஆனால் உண்மையில், காய்ச்சலில் குளிப்பது பாதுகாப்பானதா? நம் உடலுக்கு இதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
காய்ச்சலில் மிதமான தண்ணீரில் குளிக்கலாம், ஆனால் குளிர்ந்த நீரில் குளிப்பது தவிர்க்கப்பட வேண்டும். குளிர்ந்த நீர் உடல் வெப்பநிலையைத் திடீரென மாற்றி, காய்ச்சலை அதிகரிக்க வாய்ப்புண்டு. மாறாக, வெதுவெதுப்பான நீர் உடலை ஈரப்பதமாக வைத்து, வியர்வை மூலம் வெப்பத்தை வெளியேற்ற உதவுகிறது.
உங்களுக்கு காய்ச்சல் இருக்கும்போது வெதுவெதுப்பான நீரில் குளித்தால், உடல் வெப்பநிலை சிறிது சிறிதாகக் குறையும். இது காய்ச்சல் குளிர்ச்சியை தடுக்க உதவுகிறது.
காய்ச்சலில் நம் உடலில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால், உடலில் பிசுபிசு தன்மை ஏற்படுகிறது. இந்த நேரத்தில் குளித்தால் தோல் தொற்றுகள், பாக்டீரியா தொற்று குறையும்.
காய்ச்சலில் உடல் சோர்வாக இருப்பதால், சற்று சூடான நீரில் குளித்தால் உங்கள் தசைகள் ஓய்வடைந்து, மன அழுத்தம் குறையும்.
உங்களுக்கு காய்ச்சல் இருக்கும்போது குளிர்ந்த நீரில் குளித்தால், உடல் வெப்பநிலை வேகமாக உயரும், இது காய்ச்சலை அதிகரிக்கும்.
காய்ச்சலில் 10 - 15 நிமிடங்களுக்கு மேல் குளிக்கக்கூடாது. நீண்ட நேரம் நீரில் இருப்பதால், உடல் வெப்பநிலை மீண்டும் உயரலாம்.
உங்களுக்கு மிகவும் கடுமையான காய்ச்சல் அல்லது தலைசுற்றல் இருந்தால், குளிப்பதற்குப் பதிலாக ஈரத் துண்டால் உடலைத் துடைக்கலாம்.
மேலும் படிக்க: இந்த உணவுகளை சாப்பிடும்போது அலர்ஜி இருக்கா? இந்த அறிகுறிகளுக்கு காரணம் என்ன?
Image source: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com