blocked nose: மூக்கடைப்பிலிருந்து உடனடி நிவாரணம் பெற வேண்டுமா? இதை செய்யுங்கள்!

stuffy nose: மூக்கடைப்பு பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? உடனடி தீர்வைத் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படியுங்கள்.

blocked nose bigg
blocked nose bigg

மூக்கடைப்பு மிகவும் தொந்தரவு தரக்கூடியது. சில நேரங்களில் உங்கள் மூக்கு அடைப்பட்டது போல் இருக்கும், சில சமயத்தில் மூக்கிலிருந்து தண்ணீர் வழியும். மூச்சை உள்ளிழுக்கவோ வெளிவிடவோ முடியாது. மூக்கில் சளி நிறைந்திருப்பது போல் தோன்றும் ஆனால் சிந்தினால் எதுவும் வெளியே வராது.

மூக்கில், பரந்த வலையமைப்பு உடைய வால்வுகளுடன் கூடிய இரத்த நாளங்கள் உள்ளன. இந்த வால்வுகள் திறந்து மூடும் அமைப்பு கொண்டவை. உங்களுக்குத் தொற்று ஏற்படும் போதெல்லாம் மூக்கில் உள்ள நரம்புகள் எரிச்சலடைகின்றன. இதனால் வால்வுகள் திறக்கப்படுகின்றன. இதன் விளைவாக மூக்கில் அதிக ரத்தம் பாய்கிறது. இது மூக்கின் நாசி பத்திகளில் வீக்கம் ஏற்படுத்துகிறது, இந்த வீக்கம் மூக்கடைப்புக்கு வழிவகுக்கிறது.

மூக்கடைப்பு ஏற்பட காரணங்கள்

blocked nose

மூக்கடைப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன, அவற்றில் பின்வருவன அடங்கும்:

  • பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்று
  • சாதாரண சளி
  • சைனசிடிஸ்
  • அலர்ஜி
  • ஆஸ்துமா
  • நாசி பாலிப்

மூக்கடைப்பு ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்களைப் பொறுத்து சிகிக்சை முறைகள் மாறுகின்றன. உங்களுக்குக் காய்ச்சல் போன்ற மற்ற அறிகுறிகளுடன் மூக்கடைப்பு ஏற்பட்டு, அது 10 நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் நீங்கள் கட்டாயம் டாக்டரைப் பார்க்க வேண்டும். அதே நேரம் மூக்கடைப்பு ஏற்பட்ட முதல் கணமே இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள வழியைப் பின்பற்றி அதனை சரிசெய்யலாம்.

நிபுணர் கருத்து

உடற்பயிற்சி நிபுணர் ஜூஹி கபூரிடமிருந்து மூக்கடைப்பை சரிசெய்யும் வழியைத் தெரிந்து கொள்வோம். இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். உடற்பயிற்சி மூலம் இந்த பிரச்சனையை சரிசெய்யலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். “'வானிலை மாற்றத்தால் அடிக்கடி மூக்கடைப்பு, நாசி நெரிசல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எளிமையான முறையில் தீர்வு தரும் மகராசனம் பயிற்சியை செய்வதன் மூலம் இந்த பிரச்சனையை சரிசெய்யலாம்” என அவர் தெரிவித்துள்ளார். உங்களுக்கும் மூக்கடைப்பு பிரச்சனை இருந்தால் அதை சரிசெய்ய இந்த எளிய பயிற்சியை முயற்சி செய்து பாருங்கள்.

எப்படி செய்வது?

blocked nose

  • மூக்கின் இடது துளையில் அடைப்பு இருந்தால், வலது பக்கம் படுக்கவும். பின் வலது காலை மட்டும் மேலே தூக்கி தலையணை மீது வைக்கவும்
  • மூக்கின் வலது துளையில் அடைப்பு இருந்தால், இடது பக்கம் படுக்கவும். பின் இடது காலை மட்டும் மேலே தூக்கி தலையணை மீது வைக்கவும்
  • உங்கள் கைகளை இணைத்து, தலையை ஆதரித்து பிடித்துக்கொள்ளவும்.
  • வயிறு தரையில் படுவது போல் குப்புற படுக்க வேண்டும்
  • இப்படியே இடது மற்றும் வலது பக்கங்களில் சுமார் 3-5 நிமிடங்களுக்கு இந்த பயிற்சியை செய்ய வேண்டும்.

நன்மைகள்

blocked nose

  • மூக்கடைப்பிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.
  • கீழ் முதுகுக்கு ஓய்வை தர உதவுகிறது.
  • முதுகெலும்பின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கிறது.
  • மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கிறது.
  • உங்களை அமைதிப்படுத்துகிறது.
  • மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கிறது.

எச்சரிக்கை

  • கர்ப்பிணிகள் மற்றும் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், வயிற்றில் காயமுள்ள பெண்கள் இந்த பயிற்சியை செய்ய கூடாது.

சிக்கன் சூப் முதல் மூக்கு குவளை, OTC மருந்துகள் வரை மூக்கடைப்பு பிரச்சனையை சரிசெய்ய ஏராளமான வழிகள் உள்ளன. ஆனால் இது எல்லாவற்றை விடவும் இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 2 வாரங்களுக்கு மேல் மூக்கடைப்பு பிரச்சனை இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகவும். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik, herzindagi

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP