முகத்தைப் பொலிவாக்கும் அரிசி தண்ணீர்; ஒருமுறையாவது இப்படி பயன்படுத்திப் பாருங்கள்!

தங்கம் போன்று ஒளிரும் சருமத்தைப் பெற உதவும் பெண்கள் எத்தனையோ? அழகு சாதனக் குறிப்புகளைப் பின்பற்றுவார்கள். செலவே இல்லாமல் முகத்தை ஜொலிப்புடன் வைத்திருக்க அரிசி கழுவிய தண்ணீரைப் பயன்படுத்தி உள்ளீர்களா? இல்லையென்றால் ஒருமுறையாவது முயற்சி செய்யுங்கள்.
image
image

அழகு என்று வார்த்தையை உச்சரிக்கும் போதே பெண்களுடன் உடன் சேர்த்துவிடுகிறார்கள். ஆம் அழகு என்றாலே பெண்கள் என்ற எண்ணம் அனைவருக்கும் வந்துவிடுகிறது. ஆண்கள் மகன் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, பெண் பிள்ளை அழகாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு அனைவரிடத்தும் நிச்சயம் இருக்கும். இதற்கு வெள்ளை நிறத்தில் பெண்கள் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்க வேண்டும் என்பார்கள்.

இதற்கு ஏற்ப தான் பெண்களும் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதற்காக மாதம் ஒருமுறையாவது அழகு நிலையங்களை நாடி செல்கின்றனர். அனைவராலும் அங்கு செல்ல முடியுமா? என்றால் நிச்சயம் கேள்விக்குறியாக அமையும். இந்த சூழலில் என்ன செய்யலாம்? என நினைக்கும் பெண்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், வேண்டாம் என்று கீழே ஊற்றும் அரிசி கழுவிய தண்ணீரை ஒருமுறையாவது பயன்படுத்திப் பாருங்கள். கொரிய பெண்களின் முகம் ஜொலிப்புடன் இருப்பதற்கு இந்த முறையைத் தான் அதிகம் பின்பற்றுவார்களாம். எப்படி பயன்படுத்த வேண்டும்? எப்படி முகத்தைப் பொலிவாக்க அரிசி தண்ணீர் பயன்படும் என்பது குறித்து இங்கே விரிவாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

முக ஜொலிப்பிற்கு அரிசி தண்ணீர்:

பெண்கள் மட்டுமல்ல ஆண்களை தங்களது முகத்தை எப்போதும் பொலிவுடனும், பளபளப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால் அரிசி தண்ணீரை கீழ்வரக்கூடிய முறைகளில் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

rice water facial tips

அரிசி தண்ணீர் டோனர்:

முகத்தைப் பொலிவாக்க அரிசி கழுவிய தண்ணீரை டோனராகப் பயன்படுத்தலாம். ஒரு சிறிய பாட்டிலில் அரிசி கழுவிய நீர் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டையும் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். வழக்கமாக முகத்தைக் கழுவிய பின்னதாக இந்த டோனரைப் பயன்படுத்தவும். ஸ்பேரா பாட்லில் ஊற்றி லேசாக அடித்துக் கொள்ளவும். ஒரு 5 நிமிடத்திற்குப் பிறகு காட்டன் துணியால் துடைத்தெடுத்தால் போதும். முகம் ஜொலிப்புடன் இருக்கும்.

அரிசி தண்ணீர் பேஸ் பேக்:

சந்தைகளில் எத்தனையோ விதவிதமாக பேஸ் பேக்குகள் விற்பனையாகிறது. விலை மலிவாகவும், எளிமையாகவும் கிடைக்கும் பேஸ் பேக் என்றால் நிச்சயம் அரிசி கழுவிய தண்ணீரைத் தவிர வேற எதுவும் இருக்க முடியாது. ஒரு சிறிய கிண்ணத்தில் அரிசி கழுவிய நீர், அரிசி மாவு, தேன் மற்றும் பால் ஆகியவற்றை நன்கு கலந்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க:கழுத்து கருப்பாகி உங்களது அழகைக் கெடுக்கிறதா? சட்டென்று மறைய இதைப் பின்பற்றுங்கள்

வழக்கம் போல முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து அரை மணி நேரத்திற்கு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் போதும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முகத்தைப் பொலிவாக்குகிறது. கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்களைப் போக்க உதவுகிறது.

அரிசி தண்ணீருடன் கற்றாழை ஜெல்:

அடுத்ததாக அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் கடலை மாவு ஆகியவற்றுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வரவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முகத்திற்கு இறுக்கம் கொடுப்பதோடு முகப்பருக்களைப் போக்க உதவுகிறது.

அரிசி தண்ணீருடன் ஐஸ்க்யூப்:

பெண்களின் தங்களது முகத்தைப் பொலிவாக்க அரிசி கழுவிய தண்ணீருடன் ஐஸ்க்யூப்களைச் சேர்த்துக் கொள்ளவும். ஒவ்வொரு ஐஸ்க்யூப்களை எடுத்து முகத்தில் லேசாக மசாஜ் செய்யவும். இது முகத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கவும், ஜொலிப்புடன் இருக்கவும் உதவுகிறது.

மேலும் படிக்க:சருமத்தை பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த ஆயுர்வேத ஃபேஸ்பேக்கை ட்ரை பண்ணுங்க

முகத்தை எப்படி பொலிவாக்குகிறது?

அரிசி தண்ணீர் அமினோ அமிலங்கள், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ போன்ற சருமத்தைப் பாதுகாக்கும் வகையிலான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வரும் போது, ஹைப்பர் பிக்மென்டேஷன் எனப்படும் கரும்புள்ளிகளை அகற்றவும், முகத்திற்குப் பொலிவையும் தருகிறது. அப்புறம் என்ன இனி உங்களது சருமத்தைப் பொலிவாக்க ஒருமுறையாவது அரிசி கழுவிய தண்ணீரைப் பயன்படுத்திப் பாருங்கள்.

Image credit - Pexels

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP