Herbal Tea for Bloated Stomach in Tamil: வயிற்று உப்புசம் குறைய மிக சிறந்த மூலிகை டீ வகைகள்

உணவு உண்ட பிறகு வயிற்று உப்புசம் இருக்கும் மற்றும் வயிறு புடைத்தது போன்ற உணர்வு நமக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.

 
bloating reasons

பெரும்பாலான நேரங்களில் நாம் உணவு உண்ட அடுத்த நிமிடமே வயிறு உப்பியது போன்ற உணர்வை உண்டாகும். சில சமயம் ருசியில் மயங்கி நாம் அதிகம் சாப்பிடும் போது அல்லது அதிக நார்ச்சத்து மற்றும் அதிக கொழுப்பு சத்து இருக்கும் உணவை உண்ணும் போது இந்த பிரச்சினை உருவாகும். இப்படி ஒரு சூழல் உருவாகும் போது மிகவும் சங்கடமாக இருக்கும்.

எனவே நீங்கள் சில பானங்கள் தயாரித்து குடித்தால் வயிற்று உப்புசம் தீர்வதுடன் மன அமைதியும் கிடைக்கும். இந்த கட்டுரையில், மத்திய அரசின் ESIC மருத்துவமனையின் உணவு நிபுணர் ரிது பூரி அவர்கள் இது போன்ற சில பானங்களை குறித்து நம்முடன் பகிர்கிறார். இந்த பானங்கள் அதிகமாக உணவு உண்ட பிறகு ஏற்படும் வயிற்று உப்புசம் பிரச்சனையை உடனே குறைந்து விடும்.

தயிர்

செரிமானத்திற்கு மிகவும் ஏற்றது தயிர். இதில் உடலுக்கு நன்மை தரும் நுண்கிருமிகள் இருக்கின்றன. எனவே இது வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. இதனால் நாம் தயிர் பயன்படுத்தி பானம் செய்து குடிக்க வயிறு சம்பந்தமான எந்த உபாதைகளும் நமை அண்டாமல் இருக்கும். வெள்ளரி துண்டுகள், துளசி இலைகள், இஞ்சி மற்றும் கொஞ்சம் தண்ணீரை தயிருடன் சேர்க்க வேண்டும். அதிகப்படியான உணவை உண்ணும் நேரத்தில், உணவை உண்ட கையோடு இந்த பானம் தயாரித்து பருகலாம். இது நல்ல செரிமான தன்மையை தரும்.

மூலிகை டீ குடிக்கலாம்

பொதுவாக உணவு உண்ட உடனே டீ பருக கூடாது. ஏனெனில் நம் உடல் உடலில் இருக்கும் ஊட்டச்சத்துகளை முறையாக டீ உறிஞ்ச விடாது. ஆனால் நீங்கள் உப்புசம் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால் நீங்கள் நிச்சயம் இந்த மூலிகை டீயை உணவு உண்ட பிறகு பருக வேண்டும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, 1/2 ஸ்பூன் சோம்பு, 1/4 ஸ்பூன் சீரகம், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், இஞ்சி மற்றும் ஒரு துண்டு இலவங்கப்பட்டை இவற்றை தண்ணீருடன் சேர்த்து ஒன்றாக கொதிக்க விடவும். இதை வடிகட்டிய பிறகு குடித்தால் உப்பிய வயிற்றுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

புதினா டீ குடிக்கலாம்

home remedies for bloating

வயிறு உப்பி இருந்தால் அதற்கு புதினா டீ நல்ல நிவாரணம் தரும். நம் வயிற்றில் உள்ள தசைகள் வாய்வை ஏற்படுத்தி வயிற்று வலியை உண்டாக்கும். புதினா டீ இப்படிப்பட்ட தசைகளை இலகுவாக்கும். இதனால் வயிற்றில் வாய்வும் உண்டாகாது மற்றும் வயிறு உப்புசம் இருக்காது. இந்தடீ செய்ய, ஒரு ஸ்பூன் காய்ந்த புதினா இலைகள் அல்லது 3 ஸ்பூன் புதிய புதினா இலைகள் எடுத்து ஒரு கப் கொதித்த தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் இரைப்பை உணவுக்குழாய் சம்பந்தப்பட்ட நோயினாலோ அல்லது ஹெர்ணியா நோய்களினால் பாதிக்கப்பட்டவர் என்றால் இந்த பானத்தை குடிக்க கூடாது. இது குடலை மேலும் பாதித்து விடும்.

எலுமிச்சை டீ குடிக்கலாம்

home remedies for bloating

வயிறு உப்புசம் தீர எலுமிச்சை நீரை குடிக்கலாம். இது செரிமானத்திற்கு நல்லது. இதனால் அசிடிட்டி பிரச்சனையும் குறையும். நெஞ்சு எரிச்சல் பிரச்சனைக்கும் இது சிறந்த நிவாரணம் தருகிறது. எனவே நீங்கள் உப்பிய வயிற்றால் அவதிப்படுகிறீர்கள் என்றால், 1/2 எலுமிச்சையை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து குடிக்க வேண்டும்.

மேற்கூறிய அனைத்து பானங்களும் வயிறு உப்புசத்தை குறைக்கும் என்றாலும் இவற்றை குடிப்பதற்கு முன்பு ஒரு நிபுணரை கலந்து ஆலோசிப்பது நல்லது.

இதுவும் உதவலாம்:உடல் எடையை குறைக்க உதவும் ப்ளூ டீ

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP