Home remedies for headache: தலைவலியைக் குணமாக்கும் வீட்டு வைத்திய முறை!

தலைவலி ஏற்படும் போது நீங்கள் அதிக நேரம் மொபைல் அல்லது கணினி முன்பாக அமர்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். 

Home remedies for headpain

நம்மில் பெரும்பாலோனர் அதிகளவில் உபயோகிக்கக்கூடிய வார்த்தைகளில் ஒன்று தான் தலைவலி. ஆம் அலுவலக நெருக்கடி, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை என அனைத்து நேரங்களிலும் நம்மை அறியாமலேயே தலைபாரம் அல்லது தலைவலி ஏற்படக்கூடும். அதிலும் இந்த குளிர்காலத்தில் அதீத பனிப்பொழிவின் காரணமாக தலைவலி மற்றும் ஜலதோஷமும் நமக்கு ஏற்படக்கூடும். சில நேரங்களில் தலைவலியை சரிசெய்ய எத்தனை மாத்திரைகள் சாப்பிட்டாலும குணமாகாது. இதுப்போன்ற சூழலில் உங்களது தலைவலியைக் குணமாக்க வேண்டும் என்றால் வீட்டிலேயே சில வைத்திய முறைகளை நீங்கள் மேற்கொள்ளலாம். இதோ என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.

headpain treatment

தலைவலியைக் குணமாக்கும் வீட்டு வைத்தியம்:

  • தலைவலி ஏற்படும் போது நீங்கள் அதிக நேரம் மொபைல் அல்லது கணினி முன்பாக அமர்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • சளியின் காரணமாக உங்களுக்கு தலைவலி ஏற்படும் பட்சத்தில், குறைந்தது 8 மணி நேரமாவது நீங்கள் தூங்குவதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த ஓய்வு உங்களது தலைவலியைக் குணமாக்குவதற்கு உதவியாக செய்யும். எந்த சிந்தனையையும் தலையில் வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • அதீத தலைவலி உங்களுக்கு ஏற்பட்டால் நொச்சி, ஆடாதொடா, வேப்பிலை போன்ற மூலிகைகளைப் பயன்படுத்தி ஆவி பிடிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துக் கொள்ளுங்கள்.
  • சில நேரங்களில் நம்மை அறியாமலேயே தலைவலி அதிகளவில் இருக்கும் சமயத்தில், சூடாக டீ குடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்நேரத்தில் நீங்கள் டீக்குப் பதிலாக சுக்கு, மல்லி, வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து செய்யப்படும் டீயைக் குடித்தால் தலைவலி உங்களுக்கு நீங்கும்.
  • நமது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும்,தலைவலி ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுப்போன்ற நேரத்தில் நீங்கள் எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். இதற்காக நீங்கள் அதிகளவு தண்ணீர் குடிப்பதோடு, இளநீர், பழச்சாறு போன்றவற்றையும் உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • தலைவலி அதிகமாக இருக்கும் நேரத்தில் சூடான தண்ணீரில் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து தலையில் ஒத்தனம் வைக்கவும்.
  • தலைவலிக்கு மிக சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்று தான் இஞ்சி டீ. இதில் உள்ள நீர்ச்சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு வைட்டமின்கள் உள்ளதால் இஞ்சியை டீக்களில் சேர்த்துக் கொள்ளலாம். இது உங்களது தலைவலியைக் குணமாக்க உதவியாக இருக்கும்.

மேலும் படிங்க:குளிர்காலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

headache

இதுப்போன்ற வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றி இனிவரும் காலங்களில் தலைவலிக்குத் தீர்வு காண முயற்சி செய்யுங்கள். ஒருவேளை கண் பிரச்சனை இருந்தாலும் நமக்கு தலைவலி அதிகளவில் ஏற்படும். எனவே உங்களுக்கு தலைவலி அதிகமாக இருக்கும் பட்சத்தில் கண் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது..

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP