Benefits of oranges in winter: குளிர்காலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

ஆரஞ்சுகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் குளிர்கால நோய்களை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

having orange in winter

குளிர்காலம் வந்தாலே நம்முடன் பருவ காலத் தொற்றுகளும் உடன் சேர்ந்துவிடும். இதனால் தான் இந்த காலத்தில் சில உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பார்கள். அதிலும் குளிர்காலத்தில் ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதற்கு நிறைய பேர் தயக்கம் காட்டுவார்கள்.

benefits of orange in winter

மழை மற்றும் குளிர்காலத்தில் இதை சாப்பிடும் போது சளி, இருமல் பிரச்சனை ஏற்படும் என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்படுவது இயல்பான ஒன்று தான். ஆனால் குளிர்காலத்திற்கும் ஆரஞ்சு பழத்திற்கும் ஒரு நல்ல நட்புணர்வு உள்ளது என்று தான் கூற வேண்டும். ஆம் குளிர்காலத்தில் ஆரஞ்சு பழங்களை நாம் அதிகமாக சாப்பிடுவதால் எவ்வித உடல் நலப்பாதிப்பும் நமக்கு ஏற்படாது. மாறாக உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தான் வழங்கக்கூடும். இதோ அவை என்னென்ன என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்..

குளிர்காலத்தில் ஆரஞ்சு பழ நன்மைகள்:

மேலும் படிங்க:சரும ஆரோக்கியத்திற்கு உதவும் தர்பூசணி!

  • ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு வழங்குகிறது. உணவில் இதை சேர்த்துக் கொள்ளும் போது, குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்க முடியும். ஆனால் சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • ஆரஞ்சுகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் குளிர்கால நோய்களை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குறிப்பாக ஆரஞ்சு பழங்களை தவறாமல் உட்கொள்வது பொதுவான குளிர்கால சளியின் அறிகுறிகளைத் தடுக்கவும், தணிக்கவும் உதவுகிறது.
  • ஆரஞ்சுகளில் அதிகளவில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிரம்பியுள்ளன. இது குளிர்காலத்தில் இருந்து உங்களது உடலைப் பாதுகாக்கிறது.
  • ஆரஞ்சுகளில் அதிக நீர்ச்சத்து உள்ளதால், குளிர்காலத்தில் ஏற்படும் நீரிழிப்பைத் தடுக்கிறது. உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
  • பொதுவாக குளிர்காலத்தில் செரிமானப் பிரச்சனைகள் அதிகளவில் ஏற்படும். அதிலும் குளிருக்கு இதமாக நாம் சாப்பிடும் ஸ்நாக்ஸ் வகைகளால் வயிற்றுப்பிரச்சனைகளையும் சில நேரங்கள் நாம் சந்திக்க நேரிடும். இந்நேரத்தில் நீங்கள் ஆரஞ்சு பழங்களைச் சாப்பிடலாம். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்திற்கு உதவுவதோடு மலச்சிக்கலையும் தடுக்க உதவியாக உள்ளது.
face glowing in winter
  • உடல் நலப் பாதுகாப்பிற்கும் மட்டுமில்லை முக பராமரிப்பிற்கும் ஆரஞ்சு பழங்கள் உதவியாக உள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இதனால் குளிர்காலத்தில்வறண்ட சருமம் ஏற்படுவதைத் தடுத்து முகத்திற்கு பொலிவைத் தருகிறது.
  • குளிர்காலத்தில் அதிகரிக்கும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் ஆரஞ்சு பழங்களை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளதால் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது.
  • ஆரஞ்சு பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் குளிர்காலத்தில் உங்களது இரத்த அழுத்தம் மற்றும் இதய செயல்பாட்டை பராமரிக்க உதவியாக உள்ளது.

இதோடு மட்டுமின்றி ஆரஞ்சு பழத்தில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள், புற்றுநோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவியாக உள்ளது. இனி குளிர்காலங்களில் கூட தயக்கம் இன்றி நீங்கள் ஆரஞ்சு பழங்களை சாப்பிடலாம். அதே சமயம் சளி, இருமல் போன்ற பிரச்சனை ஏற்பட்டால் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இல்லையென்றால் உங்களுக்கு இருமலை அதிகப்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP