Ghee Coffee: நெய் காபி குடிப்பதால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

நீங்கள் பருகும் காபியை அதிக ஆரோக்கியம் உள்ளதாக மாற்ற வேண்டும் என்று நினைத்தால்,கொஞ்சம் நெய் சேர்த்து நெய் காபியாக பருகுங்கள்

health benefits in ghee coffee

நம்மில் பலருக்கு டீ அல்லது காபி குடித்தால் தான் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பது போன்ற மனநிலை இருக்கும். இல்லையென்றால் ஏதோ ஒன்றை தொலைத்தது போன்ற எண்ணம் ஏற்படும். அதுவும் இந்த குளிர்காலங்களில் படுக்கை விட்டு எழுந்திருக்கும் முன்னதாக யாராவது காபி குடுப்பார்களா? என்ற எதிர்ப்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். காலையில் சூடான காபியை குடிப்பது உங்களுக்கு விரைவாக அளிக்கும். இதோடு நீங்கள் பருகும் காபியை அதிக ஆரோக்கியம் உள்ளதாக மாற்ற வேண்டும் என்று நினைத்தால்,கொஞ்சம் நெய் சேர்த்து நெய் காபியாக பருகுங்கள். இதில் அத்தனை ஆரோக்கிய நன்மைகள் உள்ளது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

benefits of drinking ghee coffee

நெய் காபியின் ஆரோக்கிய நன்மைகள்

  • தினமும் நாம் பருகும், வழக்கமான காபிகளுடன் ஒப்பிடும் போது நெய் காபி உங்களுக்கு நீண்ட நேரம் அதிக ஆற்றலை அளிக்கிறது.
  • காபி இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்வதில்லை. எனவே குளிருக்கு இதமாக அல்லது தினமும் காபியைக் குடிக்கும் போது இரத்த அளவை ஒரே சீராக பராமரிக்க உதவுகிறது.
  • மனிதர்கள் சாப்பிடக்கூடிய உணவில் ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்ப்பது அவசியம். அதிலும் குளிர்காலத்தில் நீங்கள் பருகும் காபியுடன் நெய் சேர்க்கும் போது உடல் நல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம். குறிப்பாக நெய்யில் ஒமோக 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மூளையின் செயல்பாட்டையும் மேம்படுத்த உதவியாக உள்ளது.
  • நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் செரிமான பிரச்சனைக்குத் தீர்வாகவும், குடல் ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது.
  • நெய் உங்களை உள்ளிருந்து சூடாக்குவதால், குளிர்காலத்தில் கட்டாயம் நீங்கள் காபியை சாப்பிடலாம்.
  • நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளதால் இனி டயட்டில் இருப்பவர்கள் தாராளமாக நெய் காபியை பருகலாம். இது உங்களை நாள் முழுவதும் ஆற்றலுடன், உடலில் தேவையில்லாத கொழுப்புகள் சேர்வதையும் தடுக்கிறது. பசி உணர்வையும் கட்டுப்படுத்துகிறது.
  • மன அழுத்தம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. தலைவலி வந்தாலே காபியை தேடும் நாம், இதனுடன் நெய் சேர்த்துப் பருகும் போது, மன அழுத்தம் மற்றும் மனக்கவலையிலிருந்து விடுபடுவதற்கு உதவியாக இருக்கும்.

நெய் காபி செய்முறை:

நெய் காபி தயார் செய்வது என்பது கடினமாக விஷயம் அல்ல. நீங்கள் போடும் வழக்கமான காபியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளிறினாலே போதும். சிலருக்கு இனிப்பு அதிகம் தேவைப்படும் சிலருக்கு தேவைப்படாது என்பதால் அதற்கேற்ற சர்க்கரையை சேர்த்தாலே போதும் ஆரோக்கியமான நெய் காபி ரெடி.

coffee will refreshing morning

நெய் காபியில் இது போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், சில புதிய உணவுகளை நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்றால், மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னர் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP