Millet Cutlet Recipe: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறுதானிய கட்லெட்!

நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி- ஆக்சிடன்ட்கள் உள்ளதால் உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களையும் நமக்கு தருகிறது

millet recipe

இன்றைய குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்கிறார்களா? என்று கேள்வி எழுப்பினால், நிச்சயம் இல்லை என்ற பதில் தான் வரக்கூடும். அந்தளவிற்கு இன்றைய உணவுபழக்கவழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. நூடுல்ஸ், ப்ரைட் ரைஸ், சிக்கன் ரைஸ், சவர்மா, பீட்சா, பர்க்கர் என விதவிதமான உணவுகளை சாப்பிடுவதால் சிறுதானிய உணவுகளை நாம் மறந்துவிட்டோம். ஆம் நம்முடைய முன்னோர்கள் 80 வயதிலும் வலுவோடு இருப்பதற்கு சிறுதானிய உணவுகள் தான் காரணம். இதில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி- ஆக்சிடன்ட்கள் உள்ளதால் உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களையும் நமக்கு தருகிறது. இதோடு நம்மை எப்போதும் ஆக்டிவ்வாக வைத்திருக்கவும் உதவுகிறது. ஆனால் என்ன? இன்றைய குழந்தைகள் சிறுதானியங்கள் என்றாலே அலறி அடித்து ஓடுவார்கள். இனி அந்த கவலை வேண்டாம். சிறுதானியங்களிலேயே அவர்களுக்கு பிடித்தார் போன்று சில சிற்றுண்டிகளை நீங்கள் செய்துக் கொடுக்கலாம்.

இதனால் நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், குளிர்காலத்தில் ஏற்படும் நோய் தவிர்ப்பதற்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் நமக்கு வழங்குகிறது. மேலும் குளிர்காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றையும் தவிர்க்க உதவுகிறது. இதோ இன்றைக்கு சிறுதானிய உணவுகளில் ஒன்றான சாமை அரிசியில் செய்யக்கூடிய கட்லெட் எப்படி செய்வது? என்பது குறித்து அறிந்துக் கொள்ளுங்கள்.

list of milet foods

சாமை கட்லெட்:

  • சாமை அரிசி - அரை கப்
  • வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 1
  • பச்சை மிளகாய் - 1
  • வெங்காயம் - 2
  • துருவிய கேரட் - 1
  • காலிஃபிளவர் அல்லது முட்டைகோஸ் துருவியது.
  • மிளகாய் தூள் - சிறிதளவு
  • மல்லித்தூள் - சிறிதளவு
  • உப்பு சுவைக்கு ஏற்ப

செய்முறை:

  • முதலில் சாமை அரிசியை ஒரு வாணலில் சேர்த்து வறுத்து கொள்ளவும். பின்னர் சாமை அரிசியைக் கொண்டு உப்புமா செய்துக் கொள்ளவும்.
  • துருவிய கேரட், காலிஃபிளர் தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைக்கவும். சர்க்கரை வள்ளிக்கிழங்குடன் சாமை அரிசியில் செய்யப்பட்ட உப்புமாவை சேர்த்து கிளறவும்.
  • இதையடுத்து சுவைக்கு ஏற்ப மசாலா பொருள்களை சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
  • பின்னர் இந்த கலவையை லேசாக தட்டி தோசைக்கல்லில் போட்டு மிதமான சூட்டில் ப்ரை செய்யவும். பொன்னிறமாக வரும் வரை இருபுறமும் பர்ரை செய்தால் போதும். சுவையான சாமை கட்லெட் ரெடி.
cutlet foods

பள்ளி முடிந்து வரக்கூடிய உங்களது குழந்தைகளுக்கு நீங்கள் இந்த ஸ்நாக்ஸ் செய்துக் கொடுங்கள். நிச்சயம் மீண்டும் வேண்டும் என்று தான் கேட்பார்கள். சாமையில் மட்டுமல்ல, நீங்கள் தினை, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களில் கூட செய்துக் கொடுக்கலாம்.

மேலும் படிங்க:முக பளபளப்பிற்கு நீங்கள் செய்ய வேண்டியது?

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP