Benefits of Vitamin C: வைட்டமின் சி யின் ஆரோக்கிய நன்மைகளின் லிஸ்ட் தெரிஞ்சா அசந்துப்போயிருவீங்க!

வைட்டமின் சி ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி- ஆக்ஸிடன்ட் என்பதால் நாள்பட்ட நோயைக் குணப்படுத்த உதவுகிறது.

vitamin c defeciency

நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் முக்கியமான ஒன்றாக உள்ளது வைட்டமின் சி. நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாகவும் இது வைத்திருக்கிறது. இதோடு நமக்கு ஏற்படும் சோர்வு, பலவீனம், தசை மற்றும் மூட்டு வலிகள், ஈறுகளில் வீக்கம், காயங்களைக் குணப்படுத்துவதற்கு என பல உடல் நல பிரச்சனைகளுக்த் தீர்வு காண வேண்டும் என்றால் கண்டிப்பாக வைட்டமின் சி தேவைப்படும்.

ஒருவேளை உங்களது உடலில் வைட்டமின் சி குறையும் பொது நரம்பு பிரச்சனைகள், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படக்கூடும் என்பதால் உங்களது உணவு முறையில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

vitamin c health problem list

வைட்டமின் சி நிறைந்த உணவுகள்:

  • பாலினத்திற்கு ஏற்ப வைட்டமின் சியை நம்முடைய உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தினசரி 40 மிகி-75 மிகி அளவிற்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கு 80-95 மில்லிகிராமும், சிறுவர்களுக்கு 40 மில்லி கிராம் அளவும் இருக்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
  • எனவே உங்களுடைய உணவுமுறையில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த சிட்ரஸ் பழங்கள், பச்சை இலை காய்கறிகள், ஸ்ட்ராபெர்ரிகள் நெல்லிக்காய், எலுமிச்சை, போன்ற உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களுக்குக் காய்கறிகள் சாப்பிட முடியவில்லை என்றாலும் சில ஆரோக்கியமான உணவுகளோடு வைட்டமின் சி மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரையின் படி உட்கொள்ள வேண்டும்.
vitamin C tablet

வைட்டமின் சி யால் குணமடையும் நோய்கள்

  • வைட்டமின் சி ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி- ஆக்ஸிடன்ட் என்பதால் நாள்பட்ட நோயைக் குணப்படுத்த உதவுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உயர் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. இதய நோயின் அபாயத்தையும் குறைக்கிறது.
  • உடலின் இணைப்பு திசுக்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு வைட்டமின் சி சிறந்த ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இது உதவுகிறது.
  • டிமென்சியா எனப்படும் மறதி நோய் உள்ளவர்களுக்கும் வைட்டமின் சி குறைபாடு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே நினைவாற்றல் மற்றும் சிந்தனை செயல்பாடுகளை அதிகரிக்க வைட்டமின் சி உள்ள உணவுகளை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • குளிர்காலத்தில் பரவக்கூடிய தொற்றுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால் வைட்டமின் சி அவசியமான ஒன்று. இது உங்களது நோய்எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக அமைத்து தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
  • உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளைக் கரைத்து உடல் எடையை நிர்வகிக்க வேண்டும் என்றால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
vitamin C immunity
  • ஒவ்வாமை, சுவாசப்பிரச்சனை போன்ற பல நோய்களுக்குத் தீர்வு காண வைட்டமின் சி உங்களுக்கு உதவியாக உள்ளது.

மேலும் படிங்க:குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க உதவும் சிம்பிள் டிப்ஸ்!

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP