herzindagi
LOTUS BIG IMAGR

Lotus Flower Syrup: ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் தாமரை பூ சிரப்!

தாமரை பூ ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்குகின்றன. அதை எடுத்துக்கொள்வதற்கான சரியான வழியைப் பற்றி பார்க்கலாம்
Editorial
Updated:- 2023-06-23, 10:47 IST

தாமரை மலர்கள் இளஞ்சிவப்பு, வெள்ளை, சிவப்பு மற்றும் நீல நிறங்களில் இருக்கும். அவை வீட்டை அலங்கரிக்க மற்றும் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றன. அனால் தாமரை மலர்களை உணவுகளில் மற்றும் பானங்களில் பயன்படுத்தலாம். அதோ போல் தாமரை பூக்கள் உடல் நலம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாகவும் செயல்படுகிறது. 

தாமரை பூக்களில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. மேலும், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் குளோரின் போன்ற பல வகையான தாதுக்கள் இருக்கின்றது. தாமரை பூக்கள் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்களும் அதிகம் உள்ளது. 

தாமரை பூக்களில் சிறந்த ஆயுர்வேத மருந்துகளில் ஒன்றாகும் இதன் மூலம் காய்ச்சல், தலைவலி, எரிச்சல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். அதன் பலன்கள் பற்றிய தகவலை ஆயுர்வேத நிபுணர் டாக்டர் தீக்ஷா பவ்சர் பகிர்ந்துள்ளார்.

தாமரை மலர்களின் பலனைப் பெற இதை எப்படிப் பயன்படுத்தலாம் என்ற கேள்வி பெரும்பாலானோரின் மனதில் உள்ளது. எனவே அதற்கான பதில்களை கட்டுரையின் கீழ் பார்க்காலம். 

தாமரை மலர் சிரப்

Lotus syrup

பொருட்கள்

தண்ணீர் - 1 கிளாஸ்

தாமரை மலர்கள் - 3

செய்முறை

  • ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
  • அடுப்பை அனைத்த பிறகு தாமரை மலர்களை தண்ணீரில் போட்டு 2 மணி நேரம் தனியாக வைக்கவும்.
  • இரண்டு மணி நேரம் கழித்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு இந்த சிரப்பை குடிக்கவும்.
  • கோடையில் ஆரோக்கியமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

தாமரை மலர்களால் செய்யப்பட்ட சிரப்பில் இருக்கும் சத்துக்கள்: 

  • கலோரிகள் - 40
  • வைட்டமின் சி - 16.4 மி.கி
  • வைட்டமின் பி - 0.2 மி.கி
  • சோடியம் - 27 மி.கி
  • கார்போஹைட்ரேட் - 9.6 கிராம்
  • ஃபைபர் - 1.9 கிராம்
  • சர்க்கரை - 0.3 கிராம்
  • புரதம் - 1 கிராம்
  • கொழுப்பு - 0

தாமரை பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் சிரப்பின் ஆரோக்கிய நன்மைகள்

Lotus

  • காய்ச்சலில் நன்மை பயக்கும்.
  • சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
  • இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
  • இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
  • அதிக இரத்தபோக்கு நிறுத்தப்படும்.
  • இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.
  • தலைவலியிலிருந்து நிவாரணம் தரும்.
  • அதிகப்படியான தாகத்தைத் தீர்க்கிறது.
  • எரிச்சல் மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.
  • இருமல் மற்றும் காய்ச்சலில் நன்மை பயக்கும்.
  • முகத்தைப் பளபளப்பாக மாற்றும்.

 

எச்சரிக்கை

இரத்தச் சர்க்கரை குறைவாக உள்ளவர்கள் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது இரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கும். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் இதை உட்கொள்ளக்கூடாது.

இதன் மூலம் ஆரோக்கியம் தொடர்பான பல நன்மைகளைப் பெறலாம். உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனை இருந்தால், அதை எடுத்துக்கொள்வதற்கு முன், ஒரு நிபுணரை அணுகவும்.

உங்களுக்கும் ஏதேனும் உணவு தொடர்பான தகவல்கள் தேவைப்பட்டால், கட்டுரையின் கீழே உள்ள கருத்துப் பெட்டியில் தெரிவிக்கவும். இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரையை படிக்க  Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com