herzindagi
mulaikattiya pachai payaru for weight loss

Moong Sprouts Benefits : சீரான செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு முளைகட்டிய பச்சை பயிறு சாப்பிடுங்கள்!

பச்சை பயறை முளை கட்ட வைத்து சாப்பிட்டால் ஏராளமான நன்மைகளை பெறலாம். முளைக்கட்டிய பச்சைப்பயிறு தரும் 5 சிறந்த ஆரோக்கிய நன்மைகளை இன்றைய பதிவில் படித்தறிந்து பயன்பெறுங்கள்…
Updated:- 2023-09-18, 21:34 IST

காலை உணவாக இருந்தாலும் சரி மதிய வேளை ஸ்நாக்ஸ் ஆக இருந்தாலும் சரி, ஆரோக்கியமான தேர்வு என்றாலே அது சுண்டல் வகை தான். அதிலும் முளை கட்டிய பச்சை பயறுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சுவை அற்புதமான இருக்கும். 

செரிமான மண்டலத்தை சீராக வைத்துக் கொள்வது முதல் உடல் எடையை குறைப்பது வரை முளைகட்டிய பச்சை பயிறு தரும் ஆரோக்கிய நன்மைகளை ஒவ்வொன்றாக தெரிந்து கொள்வோம்.  பெரும்பாலும் பயறு வகைகளை முளை கட்டியபின் சாப்பிட்டால் அதன் ஊட்டச்சத்து மதிப்பீடு அதிகரிக்கும். அந்த வகையில் முளைகட்டிய பச்சைப் பயறை நேரடியாகவோ அல்லது வேக வைத்தோ அல்லது ஏதேனும் உணவில் பயன்படுத்தியோ நம் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

இந்த பதிவும் உதவலாம்: முட்டையை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியுமா?

செரிமானத்தை மேம்படுத்தும்

mulaikattiya pachai payaru for health

நல்ல குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்த முளைகட்டிய பச்சைப் பயறை சாப்பிடலாம். இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடவும் உதவுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செரிமான செயல்முறையை எளிதாக்குகின்றன.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்

உடலில் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிக்கும்பொழுது இதய நோய் ஏற்படுவதற்கான அபாயமும் கணிசமாக அதிகரிக்கிறது. முளைக்கட்டிய பச்சைபயறில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவுகளை கட்டுப்படுத்த உதவுகின்றன. இதன் மூலம் இரத்த நாளங்கள் மற்றும் இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கலாம்.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது

முளைகட்டிய பச்சை பயறில் நிறைந்துள்ள வைட்டமின் K வலுவான எலும்புகளை பெற உதவுகின்றன. இதில் நிறைந்துள்ள தாவர ஈஸ்ட்ரோஜன்கள் எலும்புகளின் வளர்ச்சிக்கும், அதன் அடர்த்தியை பராமரிப்பதற்கும் உதவுகின்றன. இதை தினசரி உணவில் சேர்த்து வர ஆஸ்டியோபோரோசிஸின் அபாயத்தையும் குறைக்கலாம்.

உடல் எடையை குறைக்க உதவும்

mulaikattiya pachai payaru benefits

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு முளைகட்டிய பச்சை பயறு சிறந்த தேர்வாக இருக்கும். இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து, புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் பசி உணர்வை கட்டுப்படுத்த உதவுகின்றன. கலோரி உட்கொள்ளலை கட்டுப்படுத்தவும், உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்கவும் முளைகட்டிய பச்சை பயறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தலை பெறலாம்

முளைகட்டிய பச்சை பயறில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் A மற்றும் C அதிக அளவில் காணப்படுகின்றன. இவை ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தலை பெற உதவுகின்றன. வைட்டமின் A செல்களை மீளுருவாக்கம் செய்து புதிய முடியின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. மேலும் முளைகட்டிய பச்சை பயிறு சருமத்தில் உள்ள நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: கருஞ்சீரகத்தை ஏன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தெரியுமா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com