herzindagi
image

முகத்திற்கு சோப்பு வேண்டாம்! இந்த பச்சை பயிறு பேஸ்வாஷ் பயன்படுத்தலாம்; செய்வது எப்படி?

பச்சை பயறு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இது தோல் பராமரிப்புக்கும் சிறந்தது என்பது பலருக்குத் தெரியாது.
Editorial
Updated:- 2025-07-22, 20:38 IST

ஒரு சிலர் முகத்திற்கு சோப்பு பயன்படுத்துவது இல்லை. காரணம் சோப்பில் உள்ள கெமிக்கல்ஸ் நம் சருமத்தின் ph அளவை பாதிக்கக்கூடும். நுரை அதிகம் வரும் சோப்புகளை முகத்திற்கு பாயன்படுத்துவது நல்லது இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மார்க்கெட்டில் கிடைக்கும் கெமிக்கல் பேஸ் வாஷ்கள் பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டிலேயே பச்சை பயிறு பேஸ் வாஷ் செய்து பயன்படுத்தி பாருங்கள். வெறும் 10 நாட்களில் உங்கள் சருமம் பளபளப்பாக மாறும். இந்த பச்சை பயறு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இது தோல் பராமரிப்புக்கும் சிறந்தது என்பது பலருக்குத் தெரியாது. பச்சை பயறில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தோலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன, மேலும் பல தோல் பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வாகவும் இது செயல்படுகின்றது. ஜொலிக்கும் முகத்திற்கு பச்சை பயிறு பேஸ் வாஷ் தயாரிப்பது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பச்சை பயறு பேஸ்வாஷ்:


ஒரு கப் பச்சை பயறு எடுத்து கொள்ளுங்கள். இதை வெயிலில் காயவைத்து எடுக்க வேண்டும். சுமார் 3 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை வெயிலில் காயவைத்து எடுத்தால் போதும். இதற்கு பிறகு இதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுக்க வேண்டும். குறிப்பாக தண்ணீர் எதுவும் சேர்க்காமல் இந்த பச்சை பயிரை பொடியாக அரைக்க வேண்டும். இதை ஒரு காற்று புகாத டப்பாவில் ஸ்டார் செய்து கொள்ளுங்கள். நீங்கள் தினமும் முகம் கழுவும் போது இந்த பச்சை பயிறு பொடியை 1 ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து முகத்திற்கு தேய்க்கலாம். இது இயற்கையான பேஸ்வாஷ் என்பதால் இதில் நுரை எதுவும் வராது ஆனால் உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி பளபளக்கும் சருமம் கிடைக்கும். இதை தினமும் காலை மாலை என இருவேளையும் பயன்படுத்தி வரலாம்.

green gram

சருமத்திற்கு பச்சை பயிறு:


பச்சை பயறில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை தோலின் மெலனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, தோலின் நிறத்தை சீராக்குகின்றன. பச்சை பயற்றை அரைத்து முகத்தில் பூசினால், தோல் பிரகாசமாகவும் மினுமினுப்பாகவும் தோற்றமளிக்கும்.


முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்கும்:


பச்சை பயறு நுண்ணியிர்களைக் கொல்லும் தன்மை கொண்டது. இதில் உள்ள ஜிங்க் மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் முகப்பரு, பிளாக்ஹெட்ஸ் மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்க உதவுகின்றன. பச்சை பயற்று மாவுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்துப் பயன்படுத்தினால், தோலின் எண்ணெய்த்தன்மை குறைந்து பருக்கள் விரைவாக குணமாகும்.

skin-care

சூரிய ஒளி பாதிப்பிலிருந்து தோலைப் பாதுகாக்கும்:


பச்சை பயறில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பைபோஃபிளாவின்கள் சூரியனின் புற ஊதா கதிர்களிலிருந்து தோலைப் பாதுகாக்கின்றன. இது சன்டேன் மற்றும் பிக்மென்டேஷன் பிரச்சினைகளைக் குறைக்க உதவுகிறது. அதே போல பச்சை பயறில் குளிர்ச்சியூட்டும் பண்புகள் உள்ளன, இது தோல் எரிச்சல், சிவப்பு மற்றும் அரிப்பைக் குறைக்கிறது. இதை பசும் பாலுடன் கலந்து பூசினால், தோல் அழற்சி குறையும்.

மேலும் படிக்க: முடி கொத்து கொத்தா கொட்டுதா? கவலை வேண்டாம்; ரோஸ்மேரி டீ குடித்தால் முடி வளரும்

பச்சை பயறு ஒரு இயற்கை தோல் பராமரிப்பு பொருளாக பல நன்மைகளை வழங்குகிறது. இது சரும பிரச்சினைகளைக் குறைக்கிறது, தோலின் பிரகாசத்தை அதிகரிக்கிறது மற்றும் வயதான அறிகுறிகளை தடுக்கிறது. நீங்களும் வீட்டிலேயே எளிதாக பச்சை பயறைப் பயன்படுத்தி ஆரோக்கியமான தோலைப் பெறலாம். 

Image source: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com