நெய் என்பது உணவில் சுவை சேர்க்க கூடிய பொருள் மட்டுமல்ல. இதை ஊட்டச்சத்தின் ஆற்றல் மையம் எனக் கூறலாம். நெய் தோசை, சாம்பார் சாதத்தில் ஒரு ஸ்பூன் நெய் என பல உணவுகளில் நெய் சேர்த்து சாப்பிடும் போது அதன் ருசியே மாறுகிறது. ருசியோடு மட்டுமல்ல உடலுக்கு 15க்கும் அதிகமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய உணவுப் பொருளாக நெய் உள்ளது. சிலர் நெய்யை வெறும் வயிற்றில் கூட சாப்பிடுகின்றனர். நெய்யில் உள்ள அமினோ அமிலம் உடலில் புரத இருப்பை அதிகரிக்கும். ஒரு டேபிள் ஸ்பூன் நெய் 130 கலோரிகளை கொண்டது. இதில் கொழுப்பும் அடங்கும். நெய்யில் கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, எலும்பு ஆரோக்கியத்திற்கான வைட்டமின் கே இருக்கிறது. தினமும் 2 ஸ்பூன் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
உணவுமுறையில் நெய் சேர்த்து கொண்டால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். இதில் வைட்டமின்கள் ஏ, டி, ஈ, கே மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. தினமும் நெய் சாப்பிட்டு வந்தால் செரிமானம் மேம்படும், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், இதய ஆரோக்கியம் காக்கப்படும் மற்றும் மூளை சுறுசுறுப்படையும்.
காலை நேரத்தில் வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் நெய் சாப்பிடுவது மிகவும் நல்லது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. செரிமானம் சீராகும், குடல் ஆரோக்கியம் மேம்படும். நெய் நம் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும். காலையில் நெய் சாப்பிட்டால் வளர்சிதை மாற்றம் ஊக்குவிக்கப்படும். காலையில் இரண்டு ஸ்பூன் நெய்யை கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்கவும். இது ஆயுர்வேதத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் நெய் சாப்பிட்டால் அமைதியான உணர்வு கிடைக்கும். செரோடோனின் மற்றும் மெலடோனின் ஆகியவை எளிதில் சுரக்கும். இதனால் தூக்கத்தின் தரம் மேம்படும். மன நிம்மதி கிடைத்து நன்றாக தூங்குவீர்கள். எண்ணெய் பயன்படுத்தும் இடங்களில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் குறைத்து ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
மேலும் படிங்க ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு ரம்புட்டான் பழம் சாப்பிட்டால் போதும்
நெய்யில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளதால் இது எடை இழப்புக்கு உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. செரிமானம் மேம்படும் காரணத்தால் உடலில் இருந்து நச்சுகள் கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படும். ஆரோக்கியமான கொழுப்பு எப்போதுமே இதயத்திற்கு நல்லது.
சரும வறட்சியில் இருந்து மீள நெய் உதவும். தினமும் 2 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் சருமம் பளபளக்கும். இதில் உள்ள வைட்டமின் ஈ மருத்துவ குணங்களை கொண்டது. சருமத்தின் காயங்களையும் குணப்படுத்தும். தலையில் நெய் தேய்த்தால் முடியின் வேர்கள் வலுபெறும். முடி உதிர்வு தவிர்க்கப்படும். முடி கொட்டும் பிரச்னையையும் படிப்படியாக குறைக்கலாம்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com