கொத்தமல்லி இலைகள் இல்லாமல், நாம் சமைக்கும் காய்கறிகள் எதுவும் முழுமையடையாது. காய்கறிகளை அலங்கரிக்க பச்சை கொத்தமல்லி பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் அதிலிருந்து செய்யப்படும் காரமான சட்னியும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமானது. இது ஒரு கமகமக்கும் நறுமணத்தைக் கொண்டுள்ளது மற்றும் உங்கள் உணவிற்கு ஒரு தனித்தன்மை வாய்ந்த சுவையினை சேர்க்கிறது. ஆனால் பல உணவுகளில் பயன்படுத்தப்படும் இந்த மூலிகை இலை உங்கள் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை சேர்க்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
கொத்தமல்லியின் ஈர்க்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் என்னவென்றால் அது கண்பார்வையை மேம்படுத்துகிறது மற்றும் செரிமானத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்கவும், வாய் துர்நாற்றத்தை போக்கவும் உதவுகிறது. அதன் ரகசிய நன்மைகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள, இந்த கட்டுரையை கட்டாயம் படியுங்கள்.
இதுவும் உதவலாம் :எடை இழப்பு முதல் செரிமானம் வரை பல நன்மைகளை தரும் லெமன் கிராஸ் டீ
கொத்தமல்லி இலைகளில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை செரிமானத்தை மேம்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், வீக்கம் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகின்றன. இந்த அருமையான மூலிகையானது உங்கள் வயிறை நீண்ட நேரத்திற்கு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது, இதனால் நீங்கள் அதிகமாக சாப்பிடுவதை தடுக்கிறது.
கொத்தமல்லி இலைகள் உங்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது, இது உங்கள் உடலின் அழுத்தத்தை குறைக்கிறது. இந்த இலைகள் நமது செரிமான மண்டலம் வழியாக உணவை வேகமாக நகர்த்த உதவுகின்றன, இதனால் நாம் வயிறு உப்புசம் இல்லாமல் எப்போதும் வயிறு இலகுவாக இருப்பதை உணர்கிறோம். கொத்தமல்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது.
கொத்தமல்லி இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இதன் மூலம் வாய் துர்நாற்றத்தைத் தடுக்கிறது. கொத்தமல்லி இலைகளை மென்று சாப்பிடுவது உங்கள் வாயில் எச்சில் உற்பத்தியை அதிகரிக்கிறது, வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது மற்றும் செரிமானத்தை அதிகரிக்கிறது.
வயது அதிகரிப்பால் ஏற்படும் தாக்கம் நம் இதயத்தை குறி வைக்கிறது. அதனால்தான் வைட்டமின்கள் மற்றும் புரதச்சத்துகள் நிறைந்த இத்தகைய உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். கொத்தமல்லியில் கால்சியம், இரும்பு மற்றும் மாங்கனீஸ் நிறைந்துள்ளது. ஜார்னல் ஆஃப் எத்னோஃபார்மகாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, கொத்தமல்லியை தினமும் உட்கொள்வது இதய பிரச்சினைகள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். மேலும் இது நமது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
மாதவிடாய் ஒழுங்கற்ற நிலையில் உள்ள பெண்களுக்கு கொத்தமல்லி இலைகள் நன்மை பயக்கும். இந்த மூலிகையில் அஸ்கார்பிக், பால்மிடிக், லினோலிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த அமிலங்களை உட்கொள்வதால் மாதவிடாய் சீராக இருக்கும் மற்றும் வலியும் குறைந்து விடும்.
உணவு வேதியியலில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, கொத்தமல்லியில் சில கலவைகள் உள்ளன, அவை இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த கலவைகள் சில நொதிகளை தூண்டி விடுகிறது, இதன் மூலம் இரத்தத்தில் இருந்து சர்க்கரை அகன்று விடுகிறது.
இதுவும் உதவலாம் :ஆப்பிள் மற்றும் தேனை கொண்டு உடல் எடையை குறைப்பது எப்படி?
நாள் முழுவதும், நம் கண்கள் தொலைக்காட்சி, மொபைல் போன்கள் மற்றும் மடிக்கணினிகளின் திரைகளில் தொடர்ந்து நிலைத்திருக்கும். அதன் தொடர்ச்சியான வெளிப்பாடு காரணமாக, நம் கண்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. ஆனால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனெனில் கொத்தமல்லி இலைகள் அல்லது விதைகள் இந்த சிக்கலை தீர்க்கும். கொத்தமல்லியில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் E நிறைந்துள்ளது, இது நம் கண்பார்வையை சரியாக வைத்திருக்கும். இது இரத்த சோகையை குணப்படுத்தவும் உதவுகிறது.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com